செய்திகள்
இலங்கையின் வடக்கே முல்லைத்தீவு மாவட்டத்தில் இராணுவ முகாம்கள் அமைக்கப்படவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதற்காக தனியார் காணிகள் கையகப்படுத்தப்படுவதாகவும் கூறப்படுகிறது.அந்தப் பகுதியில் மீள்குடியேற்றத்துக்காக அனுப்பப்பட்ட மக்கள் அங்கு குடியேற்றப்படவில்லை என்றும் அந்தப் பகுதி இராணுவத்தினரால் எடுக்கப்பட்டுள்ளது என்றும் தனக்கு முறைப்பாடு வந்துள்ளதாக இலங்கை அரசின் மீள்குடியேற்றத்துறையின் துணை அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தமிழோசையிடம் தெரிவித்தார்.
இதன் காரணமாக மக்கள் சலிப்படைந்துள்ளதாகவும் அவர் கூறுகிறார். முறிகண்டிப் பகுதியில் சாந்தபுரம் என்கிற பிரதேசத்திலேயே இப்படியான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறுகிறார்.
அந்தப் பகுதியில் “அரச காணிகள் இருக்கும் நிலையில், இராணுவத்தின் தேவைகளுக்கு தனியார் காணிகளை எடுக்க வேண்டிய அவசியம் இல்லை” என்று தான் கருதுவதாகவும் அமைச்சர் முரளிதரன் கூறுகிறார்.
இந்த விடயம் தொடர்பில் பாதுகாப்புச் செயலர் மற்றும் ஜனாதிபதி ஆகியோருடன் தான் பேசவிருப்பதாகவும் அவர் தமிழோசையிடம் தெரிவித்தார்.
எனினும் இதுவரை சர்ச்சைக்குரிய இந்த விடயம் தொடர்பில், இராணுவத்துக்கு காணிகள் ஏதும் வழங்கப்படவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டுகிறார்.
முறிகண்டிப் பகுதியில் இராணுவ முகாம்கள் அமைபப்தற்காகவே இந்தக் காணிகள் எடுக்கப்படுகின்ற என்று தனக்கு வந்த தகவல்களின் ஊடாக அறிந்து கொண்டதாகவும் அவர் கூறுகிறார். தனியார் காணிகளை அபகரிப்பது என்பது ஏற்றுக் கொள்ள முடியாதது
இந்த விடயம் குறித்து மக்கள் அச்சம் அடையத் தேவையில்லை என்று கூறும் துணை அமைச்சர், எதிர் வரும் திங்கட்கிழமை தானும் மூத்த அமைச்சரான மில்ராய் ஃபெர்ணாண்டோவும் அங்கு செல்ல திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவிக்கின்றார்.
“அபிவிருத்திகளுக்காக தனியார் காணிகளை எடுப்பது ஏற்றுக் கொள்ளக் கூடியது” என்றாலும், இராணுவத் தேவைகளுக்காக அவ்வாறு எடுப்பது ஏற்றுக் கொள்ள் முடியாதது என்றும் அமைச்சர் முரளிதரன் கூறுகிறார்.
அரசின் இப்படியான நடவடிக்கைகளுடன் தான் உடன்படவில்லை என்றும் அவர் தெரிவிக்கிறார்.
செய்திகள், புலத்தான்
அம்மானுடைய பக்குவமான போக்கினை புலிகளின் தலைவர் பிரபாகரனே புரிந்து கொள்ளவில்லை என்றால், எமது தமிழ் மக்களா புரிந்துகொள்ளப்போகின்றார்கள். புலிகளின் நடவடிக்கைகளை நீதியான முறையிலும், சட்டங்களுக்கேற்ற முறையிலும் தமிழர்களின் அழிவுகளைக்குறைக்கும் போக்கையும் அப்போதிருந்தே எடுத்துரைத்திருந்த போதிலும் புலிகளின் தலைமை அதனை நிராகரித்தனர். அதேபோன்று இன்றும் ஒரு சிலரின் போக்குகள் அம்மானின் அடிகளைப்புரிந்து கொள்ளாது தேவையற்ற வதந்திகளையும் அவருக்கெதிரான வதந்திகளையும் தற்போது வீசிவருகின்றனர். இந்தவகையில், புலத்தில் தமிழர்களின் போக்கு எங்கே அம்மானை ஏற்றுவிடுவார்களோ என்ற அச்சத்தில் இவ்வாறான போக்கில் மக்களை கொண்டுசெல்கின்றனர். (more…)
செய்திகள்
மற்றைய “அரசியல்வாதிகளால்” இன்றுவரை சாதிக்கமுடியாத விடயங்களை தனது அதிவிசேட சிறப்புவாய்ந்த படையணியுடன் வெற்றிநடை போட்டுக் கொண்டிருக்கின்றார். “அதிகாரங்கள் சிலருக்கு இருந்தாலும் அதனைப்ப யன்படுத்துவதற்கும், இப்பயன்பாட்டினால் ஏற்படும் பின்விளைவினை மதிநுட்பத்தோடே அறிந்து கொள்பவர் மட்டுமே அரசியல்வாதிகள்”. அதந்த விடயத்தில், தமிழக முதல்வர் கருணாநிதி அவர்களும் அமைச்சர் கருணாஅவர்களும் ஒருவகையைச் சேர்ந்தவர்கள் என்று எண்ணத் தோன்றுகின்றது. (more…)
புலத்தான்
தமிழர்களின் பலம் சாதாரணமானதல்ல… இருந்தும் இன்றும் தமிழ்த்தலைமைகள் தவறான பாதைக்கு மக்களை கொண்டு செல்லவே எத்தணிக்கின்றனர். எத்தனையோ சந்தர்ப்பங்களை எமக்குச்சாதகமாக அமைத்துக்கொள்ளக்கூடிய சாதகம் இருந்தும் அதனைப்பற்றிக்கொளய்ளாமல், மீண்டும், மீண்டும் குற்றவாளித்தன்மைக்கே மக்களை கொண்டு செல்வதனை இன்னமும் மக்கள் புரிந்தா கொள்ளவில்லை! சர்வதேசத்தின் பார்வையில் இன்று உலகத்தமிழர்கள் இருக்கின்றபோது, வேண்டுமென்றே கண்ணை இரும்புத்தணல் கொண்டு நமது கண்களை நாமே குத்திக்கொள்வது பலவலிகளையும், நீங்காத வடுக்களையும் கொணர்ந்துவிடாதா? (more…)
செய்திகள்
ஆரம்பத்தில் அம்மானுக்கு இலங்கை அரசால் வழங்கப்பட்ட அமைச்சுப்பதவி தொடர்பாக உள்ள அதிகாரங்கள் அரசியல் அனுபவம் உள்ளவர்களால் உணரமுடியாமல் இல்லை! அதன் காரணம் பல்வேறு செயற்பாடுகளை மேற்கொள்ள முடியாது இருந்தமை குறிப்பிடத்தக்கது.
ஆனால் தற்போது பிரதி அமைச்சராகப்பணியேற்ற போதிலும் அது அமைச்சரவை அங்கிகாரம் பெற்ற அமைச்சாக இருக்கின்றமையால், தனக்கு வழங்கப்பட்ட பொறுப்பினைக் கொண்டு தமிழ் மக்களுக்கு பெரும் சேவையாற்றுவார் என்பதனை பதவியேற்ற உடனே தனது விஜயத்தை மேற்கொண்டமை குறிப்பிடத்தக்கது.
அதற்கான வழிகளையே தற்போது திட்டமிட்டு வருகின்றார். விரைவில் அவருடைய சிறந்த பணி தமிழர்களை சிறப்பிக்கும். தேசிய ஒருமைப்பாட்டிற்கும் மனித வள விருத்திக்கும் அவருடைய பணி மிகவும் முக்கிய பங்காற்றவுள்ளன…
செய்திகள்
புலிகளின் அழிவிற்குக்காரணம், புலிகளே என்ற உண்மை இப்போது வெளிவந்து கொண்டிருக்கின்றது. ஆனால் இத்தனைநாழும் கருணா அம்மான் செயல் புலிகளை ஒழித்துவிட்டது என்று அவருடைய போராட்ட வீரத்தையும் தந்திரத்தையும் பாராட்டுவதற்கெதிராக வசைபாட எத்தணித்தனர். ஆனால் இப்போது தாம்தான் புலிகள் தாம்தான் புலிகள் என்று மார்தட்டியவர்கள், தாமே புலிகளையும் அழித்ததோடு, அதன் செயற்பாடுகளையும் சர்வதேச வலையமைப்பையும் சிதைவடையச் செய்து விட்டார்கள். (more…)
செய்திகள்
வாங்க தமிழ் மக்களே! உங்களுக்கான பெரும் பங்களிப்பில் நீங்களும் கலந்து கொள்ளுங்கள். ஆரம்பகாலத்தில் இருந்து அகிம்சைமூலம் பெறமுடியாதிருந்த பல்வேறு உரிமைகளை நிரந்தரமாகப்பெற்றுக்கொள்ள கிடைத்துள்ள அரிய சந்தர்ப்பமே இத்தேர்தல். இதில் தறவான பாதைகளைத் தெரிந்தெடுத்து மேலும், தமிழர்களின் இனநெருக்கடிக்கு தீர்வுகாகக்கிடைத்த சந்தர்ப்பத்தை நழுவவிடவேண்டாம். கடந்த காலத்தில் மேற்கொண்ட அதே பிளையினை மீண்டும் மீண்டும் தவறான வழிநடத்தலில் சில கட்சிகள் கொண்டு செல்லப்பார்க்கின்றார்கள் பலர். அதற்குப்புதிய புதிய பெயர்களை வைத்துத்தாண்டவமாடுகின்றனர்… இப்படி பல நாட்களுக்கு முன்னர் எழுதியும் தமிழர்கள் மீண்டும் மீண்டும் தவறையே இழைத்துவருகின்றனர். இதில் மக்களை நன்றாய்ப்பயன்படுத்திவருகின்றனர் தமிழ் கட்சிகள்… (more…)
புலத்தான்
நாமே எம்மை புகழ்ந்து தள்ளிக் கொண்டிருக்கின்றோமே ஒழிய மற்றவர்களை இகழும் வேகத்திற்கு ஒரு சிறு துளியேனும் பிறரின் சிறப்புகளை மதிக்கத்தெரியவில்லை!!! கடந்த காலத்தில் ஒரு (xxxxxxx) இணையத்தில் வெளிவந்த தகவலைதர முனைகின்றேன். “தேசியப் பட்டியலில் நாடாளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்ட கருணா, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உபதலைவராக தற்போது பதவி வகிப்பது யாவரும் அறிந்ததே. இம் முறை நடைபெறவிருக்கும் தேர்தலிலும் தாம் போட்டியிடாமல் தேசியபட்டியல் மூலம் தன்னை ஜனாதிபதி தேர்ந்தெடுப்பார் என்று கருணா கண்ட கனவில் மண் விழுந்துள்ளது. அவ்வாறு இம் முறை நடக்காது என்று ஜனாதிபதி கருணாவிடம் நேரடியாகத் தெரிவித்திருப்பதாக கொழும்பில் இருந்து செய்திகள் கசிந்துள்ளது.” இந்தத்தகவலை செய்தியாக அந்த இணையம் வெளியிடுவதிலும் பார்க்க, கருணா என்ற நபரை கேவலப்படுத்தலாம் என்ற என்ற எண்ணத்திலும், தமிழ் மக்கள் மத்தியில் அவருக்கிருக்கும் செல்வாக்கைப் பற்றியும் அறிந்து கொள்ளவே வெளியிடப்பட்டிருந்த போதிலும் அவ்வாறான இணையத்தளங்களுக்கு இப்போது கரிபூசப்பட்டுள்ளது. (more…)
செய்திகள்
உலகம் எங்கும் வாழும் தமிழ் நெஞ்சங்களுக்கு எனது இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்களை, உங்கள் அமைச்சரும் உங்கள் தலைவருமான அம்மான் அவர்கள் தெரிவித்துக்கொள்கின்றார். அத்துடன் தமது கட்சியினை நம்பி வாக்களித்தோருக்கும், வாக்களிக்கவிருப்பிருந்தும் நிர்ப்பந்தத்தின்பேரில் வாக்களிக்காதவர்களுக்கும், அதேநிர்ப்பந்தத்தின் பேரில் வாக்குகளை மற்றோருக்கு வழங்கியோருக்கும் நன்றிகளையும் ஆசிகளையும் வழங்குகின்றார்.
வருகின்ற இந்த காலத்தில் நிலையான, நிம்மதியான, சுபீட்ஷமான விடிவு தமிழர்களுக்கு கிடைக்க முழுமூச்சாக தலைவர் மகிந்தவுடன் இணைந்து பாடுபட்டு உங்கள் தேவைகளையும் நாட்டின் ஒற்றுமையினையும் பலமாக கட்டியெழுப்பப்போவதாகவும் உறுதியளிப்பதோடு, அனைத்துத்தமிழ் அமைப்புக்களையும் தம்மோடு பேதமின்றி, கசப்புணர்வின்றி இணைந்து போராடும் படி வேண்டுகின்றார். அம்மானின் வழியில் தமிழர்களின் பலத்தை அதிகரிப்போம். அம்மான் இணையக்குழு
செய்திகள்
நாமே எம்மை புகழ்ந்து தள்ளிக் கொண்டிருக்கின்றோமே ஒழிய மற்றவர்களை இகழும் வேகத்திற்கு ஒரு சிறு துளியேனும் பிறரின் சிறப்புகளை மதிக்கத்தெரியவில்லை!!! கடந்த காலத்தில் ஒரு (xxxxxxx) இணையத்தில் வெளிவந்த தகவலைதர முனைகின்றேன். “தேசியப் பட்டியலில் நாடாளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்ட கருணா, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உபதலைவராக தற்போது பதவி வகிப்பது யாவரும் அறிந்ததே. (more…)
செய்திகள்
லண்டன் பிபிசி க்கு நேற்றையதினம் அமைச்சர் வினாயகமூர்த்தி முரளிதரன் அவர்கள் வழங்கிய செவ்வி குறித்து ஒரு பார்வை
சில தினங்களுக்கு முன்னர் இத்தேர்தல் தொடர்பாக இதே வானொலிக்கு பேட்டி கொடுத்த போது, அரசியல் தெரியாதவர் என்றும் வேறு சில விதமாகவும் அமைச்சர் கருணா அவர்களை பற்றியும் ஆளுழுங்கட்சியைப்பற்றியும் அவதூறுகளை மேற்கொண்டது தொடர்பாக சில இணையங்கள் தகவல் வெளியிட்டடிருந்தன…
இது தொடர்பாகவே வேறு சில இணையங்கள் ஆக்கபூர்வமான கருத்துக்களையும் விமர்சித்திருந்தமையினையும் நாம் அறிவோம். “ கல்லாதவரும் … கற்றார் முன்” என்ற பதத்தில் “சொல்லாதிருக்கப்பொறின்” என்று அழுத்தந்திருத்தமாக வள்ளுவர் எடுத்துரைப்பதை நன்கு உணர்ந்துதான் அமைச்சர் அவர்கள் இவ்வாறான கூச்சல்களுக்கு எவ்வித பதிலையும் கொடுக்கவில்லை என்பது இப்போது புரிகின்றது.
“ஆடு அறுப்பதற்கு முன்னர் எதுக்கோ ஆசைப்பட்டமாதிரி” … சில அவசர புத்தியுடையோர் அவசரப்பட்ட தகாத வார்த்தைகளை விட்டுவிட்டு இப்போது பேசுவதற்கு வார்த்தையில்லாது இருக்கின்றனர். மாறாக அமைச்சர் கருணா அவர்கள் எதை எப்போது எப்படிப்பேச வேண்டுமென்றும், யாரோடு பேசவேண்டும், என்று நன்கு கற்றுள்ளார் என்பதனை கடந்த தேர்தலின் போதும், அவர் சார்ந்த செயற்பாடுகளை மேற்கொள்ளும் போதும் வலு தெளிவாக காட்டியுள்ளார்.
இந்த சிறந்த மனிதனுக்கா அரசியல் தெரியாது?…!!! இதே போன்றுதான் மேன்மை தாங்கிய அதிபர் மகிந்த அவர்களையும் அரசியல் தெரியாது என்றும் படுதோல்லியைச்சந்திக்கப்போகின்றார் என்றும் முன்னைய தேர்தல்காலங்களில் இருந்து பலர் வார்த்தைப்பிரயோகங்களை மேற்கொண்டாலும் மக்கள் இன்று அவருக்கு வழங்கியுள்ள ஆணையினை தலைமேல் ஏற்று அவர் செவ்வன செய்வார் என்பதனை நாமும் நம்ப வேண்டும் என்றும் அவருடன் இணைந்து செயற்பட வேண்டும் என்றும் இச்செய்தியூடாக வலியுறுத்தியும் உள்ளார்.
இதே விடயத்தை கடந்த போராட்ட காலத்திற்கு முன்னர் பிரபாகரன் தலைமை தாங்கியிருந்த அபைப்பிற்கும் எடுத்துரைத்த போதே பிளவுகள் ஏற்பட்டதனை இதில் நினைவு படுத்த விரும்புகின்றேன். அவ்வழியின் அதாவது இணைந்து செயற்படுகின்ற அணுகுமுறையில் மட்டுமே விடிவு நோக்கிய பாதைகள் திறக்கப்படும் என்பதனை அப்போது உணராதவர்கள் இப்Nபுhது என்ன செய்கின்றார்கள்????
இதே வழினை அன்று பிரபாகரன் மேற்கொண்டிருந்தால் இந்த போராட்டத்தில் நாம் இழந்த இழப்புக்களை தவிர்த்திருக்கலாம். இன்று கிழக்கு மக்கழுக்கு நிகழ்ந்திருக்கக்கூடிய பேரழிவை காத்து அவர்களுக்கு மறுவாழ்வை வழங்கிய அம்மானை மக்கள் மறக்காது நினைவு கொள்ளல் அவசியம் என்பதனை மேலும் வலியுறுதஇதுகின்றென்.
கடந்த ஜனாதிபதி தேர்தலில் மேற்கொண்ட தவறை இம்முறை தமிழ் மக்கள் விடவில்லை என்றே எண்ணத் தோன்றுகின்றது. அதற்கான ஆதாரம் வடக்குதமிழ் மக்கள் அரசசார்பில் மேற்கொண்ட வாக்குகளின் எண்ணிக்கை வலியுறுத்திக்காட்டுகின்றது. – மேலும் வரும்.
செய்திகள்
கிறீஸ்து இயேசுவின் உயிர்ப்பு விழாவின் வாழ்த்துக்களை அம்மான் இணையம் தனது வாசகர்களுக்கும் மற்றும் அனைவர்களுக்கும் தெரிவித்துக்கொள்கின்றது.
செய்திகள்
தந்தை செல்வா என்னதான் செயற்பாடுகளையும் கோரிக்கைகளையும் மேற்கொண்டாலும் அதை இலங்கை அரசுடனும் அதன் சட்டதிட்டங்களுக்கு அமையவுமே மேற்கொண்டார். அந்த வகையில் இன்று அவருடைய பணியை தொடர்ந்திருப்பவர் அமைச்சர் கருணா அம்மான் அவர்களே!!!
கடந்த வருடத்தில் வெளிவந்த எழுத்துக்கள் மீண்டும் மீண்டும் நிறைவேறி வருகின்றன என்பது ஆச்சரியத்திற்குரிய விடையமல்ல? காரணம் புலிகள் வலுவாக இருக்கும்போது, அவர்களுடைய அரசியல்போக்கும் வெளிஉலகத்தெடர்புகளும் மாற்றப்படவேண்டும் என்று பலமாக “மலரும்மாதமிழீழம்” என்ற ஈழவரலாற்று மற்றும் அரசியல் விமர்சன நாவலூடாக கண்டிப்பாக வலியுறுத்தியும் அதனை அவர்கள் உதார்சீனம்செய்தாலும் அது நிறைவேறியது அதில் குறிப்பிட்டபடி. அதுமட்டுமல்லாமல், பொதுவாகவே எழுத்தாளர்களின் எழுத்துக்களில் உண்மையும் வல்லமையும் இருப்பதனை உணரமுடிகின்றது.
செய்திகள்
வாங்க தமிழ் மக்களே! உங்களுக்கான பெரும் பங்களிப்பில் நீங்களும் கலந்து கொள்ளுங்கள். ஆரம்பகாலத்தில் இருந்து அகிம்சைமூலம் பெறமுடியாதிருந்த பல்வேறு உரிமைகளை நிரந்தரமாகப்பெற்றுக்கொள்ள கிடைத்துள்ள அரிய சந்தர்ப்பமே இத்தேர்தல். இதில் தறவான பாதைகளைத் தெரிந்தெடுத்து மேலும், தமிழர்களின் இனநெருக்கடிக்கு தீர்வுகாகக்கிடைத்த சந்தர்ப்பத்தை நழுவவிடவேண்டாம். கடந்த காலத்தில் மேற்கொண்ட அதே பிளையினை மீண்டும் மீண்டும் தவறான வழிநடத்தலில் சில கட்சிகள் கொண்டு செல்லப்பார்க்கின்றார்கள் பலர். அதற்குப் புதிய புதிய பெயர்களை வைத்துத்தாண்டவமாடுகின்றனர்… (more…)
செய்திகள்
எமது பிரதேசங்களின் இளைஞர்இ யுவதிகளின் நலன்களை மேம்படுத்தும் பொருட்டு சுய தொழிலினையும்இ பட்டப்படிப்பினையும் மஞ்சந்தொடுவா தொழில் நுட்பக்கல்லூரி வழங்கி வருகின்றது. இதன் விளைவாக அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா அம்மான்) தொழில் நுட்பக் கல்லூரிக்கு விஜயம் செய்தார். இங்கு கருத்து தெரிவித்த அமைச்சர் தொழில் நுட்பக் கல்லூரிக்கு பல வசதிகளை பெற்றுத்தருவதாக கூறியதோடுஇ விரிவுரையாளர்களை நியமிப்பதுஇ இதர வகுப்புக்களை நடாத்துவதுஇ தொழில் நுட்பக் கல்லூரிக்கு மைதானங்களைப் பெற்றுத்தருவதுஇ மஞ்சந்தொடுவா தொழில் நூட்பக் கல்லூரியை தரம் உயர்த்துவது போன்ற இன்னோரன்ன விடயங்களை அந்தந்த அமைச்சர்களுடன் கலந்துரையாடி பெற்றுத்தருவதாக வாக்குறுதியளித்தார். இதில் மஞ்சந்தொடுவா தொழில் நுட்பக் கல்லூரியின் அதிபர் திரு.எஸ். குணரெட்ணம் உள்ளிட்ட பல விரிவுரையாளர்கள் கலந்து கொண்டனர்.




இன்று ஆளும்கட்சியின் வெற்றி அம்மானின் வெற்றியே! இதே விடயங்களை முன்பு புலிகளின் தலைவர் செவிமடுத்திருந்தால் நிச்சயம் ஏற்பட்ட பேரிளப்புக்களைத் தடுத்திருக்கலாம். இன்று தேசிய இராணுவத்திற்கு ஏற்பட்ட இழப்பு முப்பது வருடத்திலும் இழந்ததிலும் பார்க்க மிகக்குறைவே, இதனால் வருகின் காலத்தில் ஏராளமான மீதப்படுத்தல்கள் நிலையான அபிவிருத்திகள், நாட்டின் இறைமை போன்ற பல்வேறு விடயங்களில் பலப்பாடு இருக்கின்றது.