எங்களுக்கும் வ(லி)ழியிருக்கு.! (வன்னியில் சிக்கியிருக்கும் ஒரு மானிட அவலையின் குரல் இது)

April 24th, 2009
Comments Off

வெட்ட வெளிகளிலும்
சேறு சகதியிலும்
சுட்டெரிக்கும் வெயிலிலும்
சுருங்கிய வயிறுகளாய்
சிதறிய  சொந்தங்களாய்
சின்னா பின்னமான
சிவப்பான எங்கள்
மண்னுடன் நாங்களும்..
உலகை காக்க ஐ.நா யிருக்கு
உயிர்களை காக்க உறவுகளிருக்கு
மரங்களையும் அந்த-
மிருகங்களையும் காக்கக்கூட
மானிட அமைப்புக்களிருக்கு
எங்களை காக்க யாரிருக்கா?…
புலத்தில் உறவுகளுக்குள் சண்டை
தளத்தில் உணர்வுகளால் சண்டை
விட்டுவிடாமல்
நாங்கள்  பொத்தி பொத்தி
பிடித்துக் கொண்டிருக்கிறோம்
எங்கள் உயிர்களை மட்டும்.
அண்ணன் வருவான் அழைத்துச் செல்ல
அக்கா வருவாள் வாரியணைக்க
சித்தப்பன் வருவான் சிறகுடன் மீட்க
காத்திருக்கும் எங்கள் பிஞ்சுகளுக்கு
தினம் வந்து மீட்பவர் எங்கள்
எம தர்மராஜர் மட்டும் தான்..
உண்ண உணவு வேண்டாம்
உடுக்க உடையும் வேண்டாம்
உரிமையும், உடமையும் வேண்டாம்
எங்கள் உயிர்களும் எங்களுக்கு வேண்டாம்
எங்கள் எச்சங்களை யாயினும்
கொஞ்சம் [...]

Filled Under: கவிதைகள்
ammaan on livestream.com.

செய்தித் தலைப்புகள்