கோரிக்கைகள் நீதியானவையாக இருக்கும் போது, அதற்கான அடிகளும் முறையானவையாக இருக்கவேண்டும்-புலத்தான்.

May 12th, 2010
Comments Off

அம்மானுடைய பக்குவமான போக்கினை புலிகளின் தலைவர் பிரபாகரனே புரிந்து கொள்ளவில்லை என்றால், எமது தமிழ் மக்களா புரிந்துகொள்ளப்போகின்றார்கள். புலிகளின் நடவடிக்கைகளை நீதியான முறையிலும், சட்டங்களுக்கேற்ற முறையிலும் தமிழர்களின் அழிவுகளைக்குறைக்கும் போக்கையும் அப்போதிருந்தே எடுத்துரைத்திருந்த போதிலும் புலிகளின் தலைமை அதனை நிராகரித்தனர். அதேபோன்று இன்றும் ஒரு சிலரின் போக்குகள் அம்மானின் அடிகளைப்புரிந்து கொள்ளாது தேவையற்ற வதந்திகளையும் அவருக்கெதிரான வதந்திகளையும் தற்போது வீசிவருகின்றனர். இந்தவகையில்,  புலத்தில் தமிழர்களின் போக்கு எங்கே அம்மானை ஏற்றுவிடுவார்களோ என்ற அச்சத்தில் இவ்வாறான போக்கில் மக்களை [...]

Filled Under: செய்திகள், புலத்தான்

இன்றும் தமிழ்த்தலைமைகள் தவறான பாதைக்கு மக்களை கொண்டு செல்லவே எத்தணிக்கின்றனர்- புலத்தான்.

May 10th, 2010
Comments Off

தமிழர்களின் பலம் சாதாரணமானதல்ல… இருந்தும் இன்றும் தமிழ்த்தலைமைகள் தவறான பாதைக்கு மக்களை கொண்டு செல்லவே எத்தணிக்கின்றனர். எத்தனையோ சந்தர்ப்பங்களை எமக்குச்சாதகமாக அமைத்துக்கொள்ளக்கூடிய சாதகம் இருந்தும் அதனைப்பற்றிக்கொளய்ளாமல், மீண்டும், மீண்டும் குற்றவாளித்தன்மைக்கே மக்களை கொண்டு செல்வதனை இன்னமும் மக்கள் புரிந்தா கொள்ளவில்லை! சர்வதேசத்தின் பார்வையில் இன்று உலகத்தமிழர்கள் இருக்கின்றபோது, வேண்டுமென்றே கண்ணை இரும்புத்தணல் கொண்டு நமது கண்களை நாமே குத்திக்கொள்வது பலவலிகளையும், நீங்காத வடுக்களையும் கொணர்ந்துவிடாதா?

Filled Under: புலத்தான்

“ஆடு அறுப்பதற்கு முன்னர் எதுக்கோ ஆசைப்பட்டமாதிரி” … அவசரபுத்தியுடையோர் வார்த்தைகளை விட்டு, இப்போது வார்த்தையில்லாது இருக்கின்றனர்…

April 13th, 2010
Comments Off

நாமே எம்மை புகழ்ந்து தள்ளிக் கொண்டிருக்கின்றோமே ஒழிய மற்றவர்களை இகழும் வேகத்திற்கு ஒரு சிறு துளியேனும் பிறரின் சிறப்புகளை மதிக்கத்தெரியவில்லை!!! கடந்த காலத்தில்  ஒரு (xxxxxxx) இணையத்தில் வெளிவந்த தகவலைதர முனைகின்றேன். “தேசியப் பட்டியலில் நாடாளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்ட கருணா, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உபதலைவராக தற்போது பதவி வகிப்பது யாவரும் அறிந்ததே. இம் முறை நடைபெறவிருக்கும் தேர்தலிலும் தாம் போட்டியிடாமல் தேசியபட்டியல் மூலம் தன்னை ஜனாதிபதி தேர்ந்தெடுப்பார் என்று கருணா கண்ட கனவில் மண் விழுந்துள்ளது. அவ்வாறு இம் [...]

Filled Under: புலத்தான்

புலிகளின் போக்கு தவறு என்பதனை தற்போதைய கூட்டமைப்பினர் வெளியிட ஆரம்பித்துள்ளார்கள்.

January 26th, 2010
Comments Off

பொய்ஞானம் எத்தனை வேகமாகப் போக்கினை அமைத்தாலும், அது மெய்ஞானத்தைப்போல் நிலைக்கமுடியாது…
கருணா அம்மான் புலிகளுடன் இருந்து பிரிந்ததாக குற்றஞ்சாட்டப்படுகின்றார். அவர் அதில் இருந்து பிரிவதற்கு முன் எடுத்த எடுப்பிலேயே பிரிந்தார் என்றால் அக்குற்றச்சாட்டு மிகச்சரியானதே! ஆனால் ஆழ இருந்து அறிக்கைவிட்டு அதற்கும் பதில் தகுந்த முறையில் வராததாலே மக்களினும், போராளிகளினதும், தமிழீழத்தின் எதிர்காலத்தையும் கருத்திற்கொண்டு தன்னை அடைகுவைத்த பொக்கிஷமே தற்போதைய அமைச்சர் வி. முரளிதரன் அவர்கள்.

Filled Under: புலத்தான்

இப்போது, கூட்டமைப்பும், மற்றைய தமிழ் அமைப்புக்களும் அம்மானின் வழியையும் அவரையும் ஏற்றுக்கொள்ள முன்வருகின்றனர்

December 29th, 2009
Comments Off

வாங்க தமிழ் மக்களே! உங்களுக்கான பெரும் பங்களிப்பில் நீங்களும் கலந்து கொள்ளுங்கள். ஆரம்பகாலத்தில் இருந்து அகிம்சைமூலம் பெறமுடியாதிருந்த பல்வேறு உரிமைகளை நிரந்தரமாகப்பெற்றுக்கொள்ள கிடைத்துள்ள அரிய சந்தர்ப்பமே இத்தேர்தல். இதில் தறவான பாதைகளைத் தெரிந்தெடுத்து மேலும், தமிழர்களின் இனநெருக்கடிக்கு தீர்வுகாகக்கிடைத்த சந்தர்ப்பத்தை நழுவவிடவேண்டாம். கடந்த காலத்தில் மேற்கொண்ட அதே பிளையினை மீண்டும் மீண்டும் தவறான வழிநடத்தலில் சில கட்சிகள் கொண்டு செல்லப்பார்க்கின்றார்கள் பலர். அதற்குப்புதிய புதிய பெயர்களை வைத்துத்தாண்டவமாடுகின்றனர்…

Filled Under: செய்திகள், புலத்தான்
ammaan on livestream.com.

செய்தித் தலைப்புகள்