புலிகளின் தலைவர் பிரபாகரன் கொல்லப்பட்டாரா? உயிருடன் இருக்கிறாரா? தப்பிச் சென்றுவிட்டாரா? கொல்லப்பட்டுவிட்டதாக காண்பிக்கப்படும் சடலம் யாருடையது? இவை எல்லோரது மனதிலும் எழும் கேள்விகள். உண்மையிலேயே பிரபாகரன் கொல்லப்பட்டுவிட்டார். காண்பிக்கப்படுவது அவருடைய சடலம் தான் இதில் எந்தவித சந்தேகமும் இல்லை. 100 வீதம் உண்மை என்கிறார் கருணா அம்மான். புலிகள் இயக்கத்தில் கேர்ணல் கருணா என்ற பதவி நிலையுடன் சுமார் 22 வருடங்கள் புலிகளின் தலைவருடன் இருந்தவர் என்ற வகையில் அமைச்சர் கருணா அம்மான் இப்படி உறுதியாக கூறுகிறார். [...]
தேசிய இன ஒருமைப்பாட்டு நல்லிணக்க அமைச்சரான
விநாயக மூர்த்தி முரளிதரன் (கருணா அம்மான்) இணையத்தளம் ஒன்றிக்கு அவரது அமைச்சில் வைத்து அளித்த பேட்டியினை இங்கு முழுமையாகத் தருகிறோம். கேள்வி: புலிகள் அமைப்பிலிருந்து விலகி அரசுடன் இணைவதற்கு முன்னர் புலிகளின் அச்சுறுத்தல் காரணமாக ஆயுதங்களை வைத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டதாகத் தெரிவித்த நீங்கள், அரசாங்கத்துடன் சேர்ந்து அமைச்சரான பின்னர் ஆயுதங்கள் எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளீர்களே.. அத்துடன் புலிகளிடமிருந்து பிரிந்து வந்தவுடன் உடனடியாகவே நீங்கள் ஏன் அரசுடன் இணையவில்லை?
பதில்: இல்லை. [...]



