அம்மான்

இதே விடயங்களை முன்பு புலிகளின் தலைவர் செவிமடுத்திருந்தால் நிச்சயம் ஏற்பட்ட பேரிளப்புக்களைத் தடுத்திருக்கலாம்.
இன்று ஆளும்கட்சியின் வெற்றி அம்மானின் வெற்றியே! இதே விடயங்களை முன்பு புலிகளின் தலைவர் செவிமடுத்திருந்தால் நிச்சயம் ஏற்பட்ட பேரிளப்புக்களைத் தடுத்திருக்கலாம். இன்று தேசிய இராணுவத்திற்கு ஏற்பட்ட  இழப்பு முப்பது வருடத்திலும் இழந்ததிலும் பார்க்க மிகக்குறைவே, இதனால் வருகின் காலத்தில் ஏராளமான மீதப்படுத்தல்கள் நிலையான அபிவிருத்திகள், நாட்டின் இறைமை போன்ற பல்வேறு விடயங்களில் பலப்பாடு இருக்கின்றது.

ஆனால் புலிகளுக்கு ஏற்பட்ட இழப்பு என்பது, முப்பது வருடத்திலும் இழந்ததிலும் பார்க்க இன்று இழந்தமை பலமடங்கு மீட்கமுடியாத இழப்பு என்பது செல்லித்தெரிய வேண்டியதல்ல! அதே போன்று தமிழ் மக்களுக்கு பிரித்தானியரின் விடுதலையின் பின்னிருந்து இன்றுவரை இழந்த இழப்புக்களுக்கு முக்கிய காரணம் புலிகளின் வண்மையான போக்கே என்றால் அது மிகையல்ல!

இதே விடயத்தை எத்தனையோதடவை புலிகளின் தலைமைக்கு அம்மான் மற்றும் புலிகளின் ஆலோசார், அரசியல் பொறுப்பாளர் எடுத்துரைத்தும் தீர்விற்கான மக்கள் பக்கம் அவர் மாறுபட்ட கருத்தையே வைத்திருந்தார் அதன் விளைவு, இன்று புதிய போக்கை மக்களுக்கு அடியெடுத்துக் கொடுத்திருக்கின்றது.

இன்று மற்றைய போராட்ட அமைப்புக்கள் கூட தமது யாப்புக்களை மாற்றியமைத்து ஆளுங்கட்சிக்குச் சாய முனைகின்றனரே ஒழிய அம்மானித் திட்டத்தில் இணைய முன்வரவில்லை என்பது தமிழர்கள் இன்னமும் கற்க வேண்டிய பலவிடயத்தை வெளிப்படுத்துகின்றது.

புலிகளின் பால் அம்மானுடைய அடிகள் இருக்கும்போது புலிகள் தோல்வியை சந்தித்ததில்லை!… தேர்தலின்போது, அம்மான் தனது பிரதிநிதியை நிர்ணயித்தபோது, தேர்தலிலும் தோல்வியைச் சந்தித்ததில்லை!…, ஆளுங்கட்சிக்கு ஆதரவு வழங்கியபோது, வெற்றியோ வெற்றியாகியதே யொழிய தோல்வியைச் சந்தித்ததே இல்லை!…  இதிலிருந்து நாம் அறியக்கூடியதென்ன???? அரசியல் திட்டத்தில், கூட்டணியினரின் போக்கிலும் பார்க்க, டக்ளசின் போக்கிலும் பார்க்க, அரசியலில் குழந்தையாக இருக்கும் பிள்ளையானின் போக்கிலும் பார்க்க, மற்றைய அரசியல் கட்சிகளின் போக்கிலும் பார்க்க வலுவானதும், சிறந்ததும் தமிழர்களுக்கு நிலையான உரிமையினைப்பெற்றுக்கொடுக்கும் என்பதிலும் இவர்பால் வெற்றியுனண்டு என்பதனை நிரூபிக்கவில்லையா?

ஐ.ம.சு.முன்னணி யின் தற்போதைய வெற்றி சிங்கள மற்றும் முஸ்லீம் மக்களை பெரும்பாலும் உள்ளடக்கி 14ஆசனங்களை ஈட்டியுள்ளது, ஆனால் ஜேவிப்பியின் கோட்டையாக எண்ணியிருந்த பெரும் பகுதியில்கூட அவர்களால் 3க்கும் அதிகமான ஆசனங்களை ஈட்ட முடியவில்லை. இதற்குக்காரணம் ஆளும் கட்சியின் அரசியல் போக்கே! அரசியல் போக்கிற்கு பெரும் தொடர்பில் இருக்கும் அம்மானின் செயற்பாட்டில் சிங்கள மற்றும் முஸ்லீம் மக்கள் புரிந்து கொண்ட அளவிற்கு, புலிகளின் பழைய தலைமைகள் புரிந்து கொள்ளாததால்தான் இன்று அவர்களின் அழிவு நிலைத்தது. மக்கள் இனி அரசியல் மூலம் மட்டுமே தமது உரிமைகளை ஜனநாயகத்தின் மூலம் நிச்சயம் நிலையான சுதந்திரத்தைப் பெற்றுக் கொள்வார்கள்.

அம்மானின், செயலை பின்பற்ற மற்றைய தமிழ்க்கட்சிகளும்  பின்பற்ற எத்தணித்துக் கொண்டிருக்கின்றனரே, ஏன் அம்மானின் தலைமையில் மீண்டும் ஒரு தமிழ்த்தலைமையினை கட்டியெழுப்பக்கூடாது???

மீள்குடியேற்ற பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் ஆகியோர் இன்று வவுனியாவுக்கு விஜயம்…
மீள்குடியேற்ற அமைச்சர் மில்றோய் பெர்ணான்டோ, வர்த்தக கைத்தொழில் அமைச்சர் றிசாட் பதிவூதீன், மீள்குடியேற்ற பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் ஆகியோர் இன்று வவுனியாவுக்கு விஜயம் செய்கின்றனர்.

இடம்பெயர்ந்த மக்களுடைய மீள்குடியேற்றம் தொடர்பான கலந்துரை யாடல் வவுனியா மாவட்ட செயலகத்தில் காலை 10 மணிக்கு நடைபெறவுள்ளது. இதற்கு வவுனியா, முல்லைத்தீவு, கிளிநொச்சி, மன்னார் மாவட்ட அரச அதிபர்கள் மீள்குடியேற்றத்துடன் தொடர்புடைய சிரேஷ்ட உயர் அதிகாரிகளும் மாவட்டத்தில் உள்ள சகல திணைக்கள உயர் அதிகாரிகளும் அழைக்கப்பட்டுள்ளனர்.

இடம்பெயர்ந்த மக்களை துரிதமாக அவர்களுடைய பழைய இடங்களுக்கு அனுப்பிவைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில் இன்னமும் எஞ்சியுள்ள மக்களையும் விரைவில் அனுப்பிவைப்பதற்குரிய ஏற்பாடுகளை செய்யவே இந்த கலந்துரையாடல் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மாவட்டத்தில் உள்ள சகல திணைக்கள தலைவர்களையும் அமைச்சர்கள் இன்று முதன்முறையாகச் சந்திக்கவுள்ளனர்

தனியார் காணிகளை அபகரிப்பது என்பது ஏற்றுக் கொள்ள முடியாதது– பி.பி.செய்தி
இலங்கையின் வடக்கே முல்லைத்தீவு மாவட்டத்தில் இராணுவ முகாம்கள் அமைக்கப்படவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதற்காக தனியார் காணிகள் கையகப்படுத்தப்படுவதாகவும் கூறப்படுகிறது.அந்தப் பகுதியில் மீள்குடியேற்றத்துக்காக அனுப்பப்பட்ட மக்கள் அங்கு குடியேற்றப்படவில்லை என்றும் அந்தப் பகுதி இராணுவத்தினரால் எடுக்கப்பட்டுள்ளது என்றும் தனக்கு முறைப்பாடு வந்துள்ளதாக இலங்கை அரசின் மீள்குடியேற்றத்துறையின் துணை அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தமிழோசையிடம் தெரிவித்தார்.

இதன் காரணமாக மக்கள் சலிப்படைந்துள்ளதாகவும் அவர் கூறுகிறார். முறிகண்டிப் பகுதியில் சாந்தபுரம் என்கிற பிரதேசத்திலேயே இப்படியான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறுகிறார்.

அந்தப் பகுதியில் “அரச காணிகள் இருக்கும் நிலையில், இராணுவத்தின் தேவைகளுக்கு தனியார் காணிகளை எடுக்க வேண்டிய அவசியம் இல்லை” என்று தான் கருதுவதாகவும் அமைச்சர் முரளிதரன் கூறுகிறார்.

இந்த விடயம் தொடர்பில் பாதுகாப்புச் செயலர் மற்றும் ஜனாதிபதி ஆகியோருடன் தான் பேசவிருப்பதாகவும் அவர் தமிழோசையிடம் தெரிவித்தார்.

எனினும் இதுவரை சர்ச்சைக்குரிய இந்த விடயம் தொடர்பில், இராணுவத்துக்கு காணிகள் ஏதும் வழங்கப்படவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டுகிறார்.

முறிகண்டிப் பகுதியில் இராணுவ முகாம்கள் அமைபப்தற்காகவே இந்தக் காணிகள் எடுக்கப்படுகின்ற என்று தனக்கு வந்த தகவல்களின் ஊடாக அறிந்து கொண்டதாகவும் அவர் கூறுகிறார்.   தனியார் காணிகளை அபகரிப்பது என்பது ஏற்றுக் கொள்ள முடியாதது

இந்த விடயம் குறித்து மக்கள் அச்சம் அடையத் தேவையில்லை என்று கூறும் துணை அமைச்சர், எதிர் வரும் திங்கட்கிழமை தானும் மூத்த அமைச்சரான மில்ராய் ஃபெர்ணாண்டோவும் அங்கு செல்ல திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவிக்கின்றார்.

“அபிவிருத்திகளுக்காக தனியார் காணிகளை எடுப்பது ஏற்றுக் கொள்ளக் கூடியது” என்றாலும், இராணுவத் தேவைகளுக்காக அவ்வாறு எடுப்பது ஏற்றுக் கொள்ள் முடியாதது என்றும் அமைச்சர் முரளிதரன் கூறுகிறார்.

அரசின் இப்படியான நடவடிக்கைகளுடன் தான் உடன்படவில்லை என்றும் அவர் தெரிவிக்கிறார்.

கோரிக்கைகள் நீதியானவையாக இருக்கும் போது, அதற்கான அடிகளும் முறையானவையாக இருக்கவேண்டும்-புலத்தான்.
அம்மானுடைய பக்குவமான போக்கினை புலிகளின் தலைவர் பிரபாகரனே புரிந்து கொள்ளவில்லை என்றால், எமது தமிழ் மக்களா புரிந்துகொள்ளப்போகின்றார்கள். புலிகளின் நடவடிக்கைகளை நீதியான முறையிலும், சட்டங்களுக்கேற்ற முறையிலும் தமிழர்களின் அழிவுகளைக்குறைக்கும் போக்கையும் அப்போதிருந்தே எடுத்துரைத்திருந்த போதிலும் புலிகளின் தலைமை அதனை நிராகரித்தனர். அதேபோன்று இன்றும் ஒரு சிலரின் போக்குகள் அம்மானின் அடிகளைப்புரிந்து கொள்ளாது தேவையற்ற வதந்திகளையும் அவருக்கெதிரான வதந்திகளையும் தற்போது வீசிவருகின்றனர். இந்தவகையில்,  புலத்தில் தமிழர்களின் போக்கு எங்கே அம்மானை ஏற்றுவிடுவார்களோ என்ற அச்சத்தில் இவ்வாறான போக்கில் மக்களை கொண்டுசெல்கின்றனர்.

இப்போது புலத்தில் புலித்தலைவர்கள் என்று தம்மை அறிமுகப்படுத்துவோரால் மேற்கொள்ளப்படுகின்ற அமைப்புகள் சட்டத்திற்குப்புறம்பானவை என்பதனை தமிழர்கள் புரிந்து கொள்ளவேண்டும். கோரிக்கைகள் நீதியானவையாக இருக்கும் போது அதற்கான அடிகளும் முறையானவையாக இருக்கவேண்டும். இல்லையேல் எந்த அரசும் அதனை ஏற்க முன்வராது என்பதனை மக்கள் உணர்ந்து கொள்ள வேண்டும். இலங்கையின் இறைமைக்கு பங்கம் விளைவிக்கக்கூடிய நடவடிக்கைகளாக புலத்துத்தமிழ் அமைப்புக்கள் காணப்படுகின்றபோது அது சர்வதேசத்தால் நிராகரிக்கப்பட்டுவிடும் என்பதனை கடந்த காலத்தில் நிகழ்ந்த துன்பவியல் சம்பவங்கள் எடுத்துக்காட்டவில்லையா?

புலிகள் போராடினார்கள், அந்தப்போராட்டம் உரிமைகளுக்காக என்று சொல்லப்பட்டபோதிலும் குறிப்பிட்ட தலைமைகளின் வாழ்வின் செழிப்பிற்கே வழிகோலியது என்றால் அது தவறில்லை. அதற்கான ஆதாரங்களும் ஏற்கனவே வெளிவந்தவைகளே! இதனை அறியாத எத்தனையோ புலிப்போராளிகள் தம்மை மண்ணுக்கு இரையாக்கிவிட்டார்கள் ஆனால் முடிவு என்னவாச்சு? இதனைத்தான் அம்மான் ஏற்கனவே எடுத்துரைத்தார். புலிகளின் தலைவர்கள் தன்னிச்சைப்போக்கை கொண்டிருந்ததால், நாம் இழந்த சொத்துக்களும் சொந்தங்களும் கொஞ்சநெஞ்சமல்ல. இதற்கு யார் பதில்தரப்போகின்றார்கள். கடந்த காலத்தில் தமிழர்களை அழித்தொழித்த முன்னாள் இராணுவதளபதியும் தற்போதைய புலித்தோல் போர்த்த பசுவாக அரசியலிலும் ஈடுபட்டிருக்கும் சரத்திற்கு தமிழ்த்தலைவர்கள் பக்கச்சார்பாக இருந்தனை இந்த நேரத்தில் குறிப்பிடத்தக்கது. புலிகளின் தலைவரால் கொல்லதிட்டமிட்ட இந்த நபரை தமிழ்த்தலைவர்கள் ஆதரித்தார்கள் என்றால் அதன் கருத்து என்னவாகின்றது?

நன்றாகச்சிந்தித்துப்பார்க்க வேண்டிய ஒரு விடயம் என்னவென்றால் புலிகளின் ஆயுத மௌனிப்பு எப்போது இடம் பெற்றது என்ற விடயம். இந்த மௌனிப்பை அரசு சரணடைவதற்கான காலம் வழங்கப்பட்டபோது புலிகள் ஒப்புக்கொண்டிருந்தாலாவது பல உயிர்ச் சேதத்தைத்தவிர்த்திருக்கலாம். புலிகள் தோல்வியைச் சந்தித்துக்கொண்டிருந்த போதிலே புலத்தில் புலிகளின் ஊடகங்கள் தவறான செய்திகளையே வெளியிட்டன. அதாவது, புலிகள் தமது வெற்றியை நோக்கிகொண்டிருக்கின்றார்கள் என்றும் இன்னும் சில நாட்களில் பலத்த சேதத்தை இராணுவம் அடையப்போகின்றதென்றும், பலத்த உண்மைக்கு மாறான தகவல்களையே மக்களுக்கு வெளியிட்டனர். இவற்றை இன்னும் பல மக்கள் புரிந்து கொள்ள முடியாது இருக்கின்றமை அவர்களுடைய அறியாமையினைக்காட்டவில்லையா?

மேலும் தற்போது கூட்டமைப்பு எந்த நிலையில் இருக்கின்றதோ அதே நிலையில்தானே அம்மானும் தன்னை அர்ப்பணித்திருந்தார். ஆனால் கூட்டமைப்பினால் சாதிக்கமுடியாததை அம்மானால் தமிழர்களுக்குப்பெற்றுக்கொடுக்கமுடியும் என்றால் அது மிகையில்லை! ஆதற்கான ஆதரவிரை சென்ற காலத்தில் தேர்தலில் மக்கள் வழங்காது விட்டுhலும், அவர்களுடைய அறியாமையினை பொருட்படுத்தாமல் மேற்கொண்டு செய்ய வேண்டிய அபிவிருத்திகளை தமிழ் மக்களுக்குச் செய்யவேண்டிய கடப்பாட்டில் அம்மான் அவர்கள் இருக்கின்றார் என்றால் அது அப்பட்டமான உண்மையே!!!

இன்று பலவருடங்களாக அரசியலில் ஈடுபட்டிருந்தவர்களை மக்கள் நிராகரித்துள்ளார்கள் என்றால், அவர்கள் தமிழர்களின் எந்த அபிலாஷைகளையும் தீர்க்க முயன்றதில்லை என்பதனை தமிழர்கள் உணர்ந்திருக்கின்றார்கள் என்பது புரிகின்றபோதிலும் புலத்தில் இயங்கும் சில அமைப்புக்களின் செயற்பாடுகள் சட்டத்திற்குப்புறம்பான வகையிலும் இணையங்கள் உண்மைக்குப்புறம்பான வகையிலும் செயற்படுவது வரவேற்கத்தக்கதல்ல என்பதனை முன்கூட்டியே தமிழ் சமுகம் புரிந்து கொள்ள வேண்டும். அவ்வாறு நீங்கள் புரிந்து கொள்வீர்களேயானால்,  பின்னோக்கி சென்று கொண்டிருக்கும் எமது தமிழர்களின் நிலை இலங்கை அரசில் உயர்நிலைக்கு செல்லும் என்பதில் எந்த ஐயமும் இல்லை!!! எனவே காலம் தாழ்த்தியேனும் மக்கள் அம்மானை புரிந்து அவருக்கு ஆதரவை அதிகமாக வழங்கவேண்டும் என்பது இன்றியமையாததொன்றாக காணப்படுகின்றது. புலத்தான்.

கூச்சலின்றியும் கூக்குரலின்றியும் தனது திடமான கட்சிதமான பாதைகளைச் செம்மையாக பதித்துவருகின்றார்
மற்றைய “அரசியல்வாதிகளால்” இன்றுவரை சாதிக்கமுடியாத விடயங்களை தனது அதிவிசேட சிறப்புவாய்ந்த படையணியுடன் வெற்றிநடை போட்டுக் கொண்டிருக்கின்றார். “அதிகாரங்கள் சிலருக்கு இருந்தாலும் அதனைப்ப யன்படுத்துவதற்கும், இப்பயன்பாட்டினால் ஏற்படும் பின்விளைவினை மதிநுட்பத்தோடே அறிந்து கொள்பவர் மட்டுமே அரசியல்வாதிகள்”. அதந்த விடயத்தில், தமிழக முதல்வர் கருணாநிதி அவர்களும் அமைச்சர் கருணாஅவர்களும் ஒருவகையைச் சேர்ந்தவர்கள் என்று எண்ணத் தோன்றுகின்றது.

இன்று எத்தனையோ தமிழ் அரசியல்வாதிகள் தமிழகத்தை ஆண்டபோதும், தமிழ் மொழிக்கு அவர்கள் செய்தது என்ன? தமிழர்களை பேக்காட்டி தம்மைத் திடப்படுத்தினார்களேயொழிய, தமிழர்களின் அடிப்படையே அவர்களின் மொழி, அம்மொழியினை சர்வதேசத்திற்குக் கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கயாரும் முன்வரவில்லை… ஆனால் தமிழகமுதல்வர், இந்தியாவில் சட்டமொழியாக தமிழைக் கொணர முயற்சிக்கின்றார். இப்போக்கு நாளை ஐ.நா. சபையில் பேசப்படும் மிகமுக்கிய ஆசியமொழியில் தமிழும் ஒன்றாக வரவேண்டும்.

உலகமுழுதும் தமிழ் பேசப்படுகின்ற போதிலும், உலகின் பலநாடுகளில் அரச மொழியாக தமிழ் இருந்த போதிலும், தமிழுக்காக மற்றும் தமிழர்களுக்காக பல போராட்டங்கள் உலகளாவிய ரீதியில் இடம்பெற்ற போதிலும், இம்மொழி ஐ.நா சபையில் ஒரு தமிழனால் பேசப்படவில்லை. ஆனால் சிங்களம் பேசப்படும் ஒரே ஒருநாடு இலங்கையாக இருந்தபோதிலும் இன்று அதனை ஐ.நா சபையில் பேசும் அளவிற்கு இலங்கை அரசியல் சென்று கொண்டிருக்கின்றது. தமிழ் இலங்கையில் அரசமொழியாக காணப்பட்டபோதிலும் அது பயனற்றுக் கிடக்கின்றதோடு, தமிழர்களே தமிழில் பேசுவதற்கு அச்சப்படுகின்றதோடு வெட்கப்படுகின்றனர். மொழியின் மூலமே தாம் அறிவாளிகள் என்பதனைக்காட்ட எத்தணிக்கின்ற முட்டாள்தனத்தைக் கொண்டிருக்கின்றனர்.

இலங்கையில் அமைதிகிடைக்கவேண்டும் என்று போராடுவோர்மத்தியில், ஆதரவற்று இந்தியாவிற்கு அகதி நிலையில் உள்ள அம்மக்களுக்காக ஒரு தேசியத்தையே கொடுக்கின்ற அரசியல்தந்திரம் உடைய கருணாநிதியைப்போல், அமைச்சர் கருணா அவர்களும் தனது அடிகளை மிகப்பக்குவமாக எடுத்து வைத்துக் கொண்டிருக்கின்றார்.

கலை, கல்வி, கலாசாரம், அபிவிருத்தி என்று மட்டு மல்லாது அரசியலிலும் தனது பாதைகளைத் தமிழர்களுக்காக பக்குவமாகவும் கட்சிதமாகவும் எடுத்துவைத்த முதல்தமிழன் என்ற பெயர் அவருக்கே உரியது. அவருடைய வளர்ச்சிக்கு பெரிதும் உதவிக் கொண்டிருக்கின்றவர்கள் அவருக்கெதிராகச் செயற்படும் விசமிகளே! அவர்கள் இருப்பதால்தான், அவர்கள் தம்முடைய அற்பமான செயற்பாட்டைச் செய்வதனால்தான் அம்மானுடைய செயலின் அற்புதத்தன்மை வெளியில் தெரிகின்றது. அம்மானுடைய செயல் தனாக வெளிப்படுவதிலும்பார்க்க ஒப்பிட்டளவிலே வெளிவருகின்றன. அதன்மூலமே அவர் நிலையான காரியத்தை மேற்கொள்கின்றார் என்பதனை மக்களுக்கு பிரித்துக்காட்டுகின்றார்.

புலிகள் இன்றும் முன்புபோல் இயங்கியிருப்பார்களாயின் அம்மானுடைய செயல், அமைச்சர் டக்ளசைப்போலும் கூட்டணியினரைப்போலும், கூட்டமைப்பைப்போலும் வெறும் கூச்சலாகக் காணப்பட்டிருக்கும்… செயற்பாட்டாளராக இருக்கும் ஒரேயொரு செயல் வீரன் அம்மான் அவர்களே! தமிழக அரசில் யெயலலிதா போடும் கூச்சலை கலைஞர் அவர்கள் ஒரு துரம்பாகக்கூட கருதவில்லை. அதுபோலவே இலங்கைத்தமிழ் அரசியலில் பல கூச்சல்கள் போடப்படுகின்றன. ஆனால் அம்மான் கூச்சலின்றியும் கூக்குரலின்றியும் தனது திடமான கட்சிதமான பாதைகளைச் செம்மையாக பதித்துவருகின்றார். அவருடைய பாதைகளைத் தடைபோட எத்தணிப்போர் பலரிருந்தும் அவற்றை தனது அரசியல் தந்திரத்தால் முறியடித்தபோதிலும், அவர் தமிழர்கள் மத்தியில் கேட்கும் ஒரேயொரு விடயம் இலங்கை அரசியலில் தமிழர்களின் பலத்தை அதிகரிக்க மக்களின் ஆதரவை மட்டுமே! - புலத்தான்