கிழக்கு மாகணத்தில் மட்டுமன்றி இலங்கை பூராகவும் மக்கள் மனதில் வெற்றி நடை போட்டுக்கொண்டிருக்கும் கௌரவ ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அவர்களின் சிந்தனையின் கீழ் வழி நடத்தப்பட்டுக்கொண்டிருக்கும் சிறீலங்கா சுதந்திரக்கட்சியின் கிழக்குமாகான அமைப்பாளர்களுக்கும் , உறுப்பினர்களுக்குமான இரண்டாவது கலந்துரையாடல் கூட்டம் நேற்று மாலை தேசிய நல்லிணக்க மறுசீரமைப்பு அமைச்சரும் , சிறீலங்கா சுதந்திரக்கட்சியின் பிரதித் தலைவருமாகிய விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா அம்மான்) அவர்களின் தலமையில் மட்டக்களப்பில் நடைபெற்றது. அமைச்சர் வி. முரளிதரன் அவர்களின் தலமையில் நடைபெற்ற இவ் ஒன்று [...]
30 வருட கால வரலாற்று யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டாலும் எமது தமிழர்களின் வாழ்வில் இன்னும் விடியல் ஏற்ப்படவில்லை பயங்கரவாதத்திக்கெதிரான யுத்தத்தில் பாதிப்புற்று இன்று அகதிமுகாம்களில் பல இலட்சக்கணக்கான தமிழ் மக்கள் தனது உறவுகளை பிரிந்து சிதறிக்கிடக்கின்றனர். முப்பது வருடங்களாக தங்களது பிள்ளைகளை போரில் பறிகொடுத்துவிட்டு இன்று அனாதைகளாக அகதி முகாம்களில் ஆதரவின்றி தனிமரமாக நிக்கின்றனர். தமிழ் மக்கள் சுதந்திரமாக வாழவேண்டும் என்று அன்று எந்த மக்களுக்காக ஆயுதம் தூக்கினாரோ இன்று அதே மக்களுக்காக அதிகாரமிக்க தமிழ் அமைச்சர் [...]
வன்னி யுத்தத்தினால் இடம்பெயர்ந்து வவுனியா நலம்புரி முகாம்களில் தங்கிருக்கும் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த அனைத்து மக்களையும் மிக விரைவில் கிழக்கு மாகாணத்துக்கு அழைத்து வர தேசிய நல்லிணக்க அமைச்சரும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்ச்சியின் உப தலைவருமான விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா அம்மான்) அவர்கள் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக அமைச்சரின் ஊடக செயலாளர் யூலியன் ஞானப்பிரகாசம் தெரிவித்துள்ளார். நீண்ட காலமாக முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் மட்டக்களப்பு , அம்பாறை , திருகோணமலை மாவட்டங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான குடும்பங்கள் வசித்து வந்தன. [...]
புலித் தலைமையால் தனிமனிதர் என்று கருதப்பட்ட கருணா அம்மான் என்ற அந்தத் தனிமனிதனின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்க மனமில்லாத காரணத்தினால் இன்று முப்பது வருடகால தமிழீழப் போராட்டம் முப்பது மாதங்களுக்குள் முடிவுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.நாகரீக அரசியல் உலகத்திற்கு ஏற்றாற்போல நாங்களும் மாறுபட்டேஆக வேண்டிய ஈழப்போராட்ட வரலாற்றில் பெரிதும் தேவையான தொன்றாக இருந்தது.தலைவன் பிழை செய்யும்போது அதைச் சுட்டிக்காட்டும் மக்களாக நாம் அன்று ஒன்றுபட்டு இருக்கவில்லை. புத்திஜீவிகள், அரசியல் தலைவர்கள், என்று சுற்றிவரப் பலபேர் இருந்தும் பிரபாகரனின் தவறான அணுகுமுறைகளைச் [...]
தமிழ் , முஸ்லீம் உறவுகள் ஒன்றுபட்டு இனவாதமற்றவர்களாக நாட்டை கட்டியெழுப்ப அனைவரும் ஒற்றுமைபடவேண்டும் என்று தேசிய நல்லிணக்க மறுசீரமைப்பு அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் ( கருணா அம்மான்) அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளார். காத்தான்குடியில் கிழக்கு மகாணசபை சுகாதார அமைச்சர் ஹிஸ்புல்லா தலமையில் நடைபெற்ற இனநல்லுறவுக்கான சிறப்பு நிகழ்வில் கலந்து கொண்டு பேசும் போதே அமைச்சர் அவர்கள் இவ்வாறு கூறிப்பிட்டார். அவர் மேலும் குறிப்பிடுகையில் கடந்த காலங்களில் நடந்த கசப்பான உணர்வுகளை மறந்து தமிழ், முஸ்லீம் உறவுகளாகிய நாம் நம் [...]



