எத்தகைய தாக்கங்களைத் தாங்கிக்கொண்டு மேதகு அமைச்சர் வி.முரளிதரன் அவர்களின் அரசியல் முன்னெடுக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது. அரசாங்கத்தின் பார்வைக்கு கொஞ்சம் சறுகினாலும் நன்மதிப்பிழந்து தமிழர்கள் ஆதரவற்று விடுவார்கள்… எதிர்க்கட்சியினர் வீசும் வலையில் சிக்குப்பட்டால், அதனிலும் கேவலமாக பாதிப்பிற்குள்ளாகவேண்டும். தற்போதைய ஆளுங்கட்சியினரின் அரசியலிலே எமக்குவேண்டிய உரிமைகளைப்பெற்றாகவேண்டும். மீண்டும் மற்றய சிங்களக்கட்சிகள் ஆட்சிக்குவந்தால் அதோகதிதான்… ஒற்றுமையில்லாத பல தமிழ்க் கட்சிகள் ஒருபுறம்… புலிகளின் ஆதரவாளர்களின் தகாத செயல்கள் இன்னொருபுறம்…
புலிகளின் கப்பல் விமானம் போன்ற போர்தளவாடங்கள் மற்றும் வாகனங்கள் போன்ற ஏனைய பொருட்கள் போரிற்கு முன்னரே வேறு நாடுகளுக்கு அதாவது புலிகளுக்கு உதவிரவுகின்ற அல்லது புலிகள் உதவிவழங்குகின்ற நதாடுகளுக்கக் கொண்டு செல்லப்பட்டன. அவை குறித்த நேரத்தில் திரும்பி வருவதிலும் தகுந்த வெளிநாட்டுத் தொடர்பில் ஏற்பட்ட தாமதமும் இலங்கை அரசுக்கு பன்னாட்டு ஆதரவும் இப்போரை புலிகளின் பால் தோல்வியடையச்செய்தது.
அறிக்கை - இது தொடர்பாக நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் ஒன்றினை தற்பொழுதிற்கு அமைப்பதற்கான திட்டம் ஒன்றினை முன்வைக்க விரும்புகின்றோம்.
புலிகளுக்கும் நாடுகடந்த தமிழீழ செயற்கு ழுவிற்கும் தொடர்பென்ன??? மேலும் திரு உருத்திரகுமார் அவர்களின் அறிக்கைக்காக எமது வினாவினை சர்வதேச ரீதியில் இருந்து வினாவுகின்றோம்.
புலிகளிடம் இருந்து ஏராளம் ஆயுத தளபாடங்கள் கைப்பற்றப்பட்டது, 20ஆயிரத்திற்கும் மேலான புலிகள் உறுப்பினர்கள் கைதுசெய்யப்பட்டனர். தமது கட்டுப்பாட்டுக்குள் இருந்த பிரதேசத்தில் அமைப்புக்களையும், மதத்தலைவர்களையும், அரசஊழியர்களையும், மக்களையும் ஆயுதமுனையில் வழிநடத்தினர். அப்படி இருக்கும் போது புலிகள் 30 வருட போராட்டத்தை ஆறுமாதத்திற்குள் தோற்றதற்குக்காரணம்என்ன?



