ஊருக்குத்தான் உபதேசம் உனக்கில்லையடா தமிழா

October 30th, 2009
Comments Off

தொல் திருமாவளவன் தொல்திருமாவளவன் என்றொருவர் இருந்தாராம். அவரை தொப்பிள்கொடி, விடுதலைப்போராட்ட ஆதரவாளர், இந்தியப்புலி, புலிஆதரவாளர் என்றெல்லாம் புகழ்ந்து தள்ளினினம். அவருக்கு ஈழத்தின்மேலும் பிரபாகரன்மீதும் இருந்த அளப்பெரிய பற்றால் விடுதலைச்சிறுத்தை என்ற கட்சியையும் பதிவுசெய்து தமிழ் நாட்டில் ஒரு இளைஞர் படையணியையே நடாத்திவந்த பெருந்தகை.
அவருடைய விடுதலைப்போராட்டப்பேச்சில் ஆவேசப்பட்டு பலர் தீக்குளித்து மரணத்தை எய்து மாவீரர்களானார்கள் என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன். இப்பேற்பட்ட செம்மலை, கடந்த காலத்தில் கொஞ்சமல்ல ரொம்பவே காலுக்குள்போட்டு நசுக்கிப்போட்டினம் புலத்துப்புலி ஆதரவாளர்கள்.

Filled Under: புலத்தான்

அமைச்சரும் சிறீலங்கா சுதந்திரக்கட்சியின் பிரதித்தலைவருமாகிய விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா அம்மான்) அவர்களின் பாதுகாப்பு அதிகரிக்கப்படவேண்டும்.

October 22nd, 2009
Comments Off

அம்மானுடைய பாதுகாப்பு அதிகரிக்கப்படவேண்டும்.
இன்று தமிழர்கள் மத்தியில் அமைச்சர் வி.முரளிதரன் அவர்களின் நன்மதிப்பு அதிகரித்தமையின்காரணத்தால், சில முறையற்ற மற்றும் அனுபவமற்ற அரசியல்வாதிகளின் கபடமானபோக்கும், தீவிரவாதசெய்கைகளைமேற்கொள்ளும் நபர்களிடமும் இருந்து அவரைக்காக்கவேண்டிய பொறுப்பு இலங்கை அரசிற்கு மூவகையில் உண்டு, தமிழர்களின் சார்பில் பல ஒப்பந்தங்களை மேற்கொண்ட முக்கிய பிரதிநிதி என்ற வகையிலும், முதலிடம் பெற்றுள்ள கட்சியின் முக்கிய பொறுப்பில் உள்ளவர் என்ற வகையிலும், அரசின் அமைச்சர் என்ற முறையிலும் அவரைப்பாதுகாக்கவேண்டிய பொறுப்பு அதிகமாகவே உள்ளது.

Filled Under: புலத்தான்

இன்று தமிழ் மக்களுக்குத்தேவை ஒரு நல்ல அரச அதிகாரமுடைய தமிழ்த்தலைமை என்றால் அது மிகையில்லை. Nanri - Thenral

October 21st, 2009
Comments Off

ஆழுமை என்பது எல்லா மனிதர்களுக்கும் வாய்ப்பதில்லை! ஆழுமையுடன் முயற்சியும் அதிஸ்டமும் வேலை செய்தால் அந்த மனிதன் இருக்கும் இடமே வேறு, அதுவே சற்றுச் சறுக்கிவிட்டால் அவர் கிடக்கும் இடமோ சேறு… இதே நிலைதான் கிழக்குமாகான முதல் அமைச்சர் சந்திரகாந்தனுக்கும் கிடைத்துள்ளது. மெய்ப்பாதுகாவலனாக இருந்த ஒருவருக்கு திடீரென முதல் அமைச்சர்பதவி சிடைத்தது அதிஸ்டம், ஆனால் அது போராட்ட விடயமல்ல அரசியல் விடயம் எனவேதான் அப்பதவி அவருக்குப் பொருத்தமானதாக இருக்கின்றதா என்ற வினா எழத்தெடங்கிவிட்டது. அதாவது, சாதாரண அரச அதிகாரிகளின் [...]

Filled Under: செய்திகள்

பலம்பொருந்திய தமிழ்த்தலைமுறை ஒன்றை கட்டியெழுப்புவேன்.

October 19th, 2009
Comments Off

என் அன்பிலும் மேலான எம் உறவுகளே!
 
கடந்த காலங்களில் நாம் பெற்ற துன்பங்களையும், இன்பங்களையும் உங்களோடு சேர்ந்து உங்களோடு நின்று உணர்ந்தவன், அறிந்தவன் என்ற ரீதியில் என்றும் உங்களோடு இருக்க விரும்புகின்றேன்.
 
எமது இலங்கை திருநாட்டில் கடந்த கால கொடுமையான யுத்தத்தின் மூலம் எமது மக்களின் தேவைகருதி, அரசியல் நோக்கிய விடுதலைப் பயணத்தில் இணைத்துக்கொண்டவன் நான்.

Filled Under: செய்திகள்

அம்மானின் அடிகளும் வெற்றிதான், முரளிதரனின் திட்டமும் வெற்றிதான்…

October 12th, 2009
Comments Off

 இன்று ஆளும்கட்சியின் வெற்றி அம்மானின் வெற்றியே! இதே விடயங்களை முன்பு புலிகளின் தலைவர் செவிமடுத்திருந்தால் நிச்சயம் ஏற்பட்ட பேரிளப்புக்களைத் தடுத்திருக்கலாம். இன்று தேசிய இராணுவத்திற்கு ஏற்பட்ட  இழப்பு முப்பது வருடத்திலும் இழந்ததிலும் பார்க்க மிகக்குறைவே, இதனால் வருகின் காலத்தில் ஏராளமான மீதப்படுத்தல்கள் நிலையான அபிவிருத்திகள், நாட்டின் இறைமை போன்ற பல்வேறு விடயங்களில் பலப்பாடு இருக்கின்றது.

Filled Under: புலத்தான்
ammaan on livestream.com.

செய்தித் தலைப்புகள்