வாங்க தமிழ் மக்களே! உங்களுக்கான பெரும் பங்களிப்பில் நீங்களும் கலந்து கொள்ளுங்கள். ஆரம்பகாலத்தில் இருந்து அகிம்சைமூலம் பெறமுடியாதிருந்த பல்வேறு உரிமைகளை நிரந்தரமாகப்பெற்றுக்கொள்ள கிடைத்துள்ள அரிய சந்தர்ப்பமே இத்தேர்தல். இதில் தறவான பாதைகளைத் தெரிந்தெடுத்து மேலும், தமிழர்களின் இனநெருக்கடிக்கு தீர்வுகாகக்கிடைத்த சந்தர்ப்பத்தை நழுவவிடவேண்டாம். கடந்த காலத்தில் மேற்கொண்ட அதே பிளையினை மீண்டும் மீண்டும் தவறான வழிநடத்தலில் சில கட்சிகள் கொண்டு செல்லப்பார்க்கின்றார்கள் பலர். அதற்குப்புதிய புதிய பெயர்களை வைத்துத்தாண்டவமாடுகின்றனர்…
இந்நிகழ்வின் போது அமைச்சர் கருணா அம்மான் அவர்கள் போன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டு நினைவுச்சின்னமும் வழங்கப்பட்டது
அமைச்சர் கருணா அவர்களுக்கொரு வேண்டுகோள். முன்பே பலதடவைகள் தங்களுக்கு எழுதிய விடயமே! தேர்தல் விரைவில் வரும், அதற்கு முன்னர் தங்கள் தடத்தை புலத்து மக்கள் மத்தியில் செலுத்துங்கள் என்றும், புலத்தில் இருப்பவர்களின் வாக்குகளில் பெரும்பாலானவை தங்களுக்கு ஆதரவாக விழக்கூடிய சந்தர்ப்பம் இருப்பதற்கான நடவடிக்கைகளை எடுத்து, பின்னர் புலத்தில் இருப்பவர்களிடத்திலும் தேர்தலுக்கான வாக்குரிமையினைப் பெறுவதற்கு ஆவணசெய்யும் படி கடந்த 6மாதங்களுக்கு முன்னரே அறிவித்திருந்தும் அதனை தாங்கள் பொருட்டாகக் கொள்ளவில்லை. அல்லது அதன் வேகம் போதாமையால் புலத்தில் வாழும் தமிழர்களின் [...]
இன்று தமிழர்கள் மத்தியில் அமைச்சர் வி.முரளிதரன் அவர்களின் நன்மதிப்பு அதிகரித்தமையின்காரணத்தால், சில முறையற்ற மற்றும் அனுபவமற்ற அரசியல்வாதிகளின் கபடமானபோக்கும், தீவிரவாதசெய்கைகளைமேற்கொள்ளும் நபர்களிடமும் இருந்து அவரைக்காக்கவேண்டிய பொறுப்பு இலங்கை அரசிற்கு மூவகையில் உண்டு, தமிழர்களின் சார்பில் பல ஒப்பந்தங்களை மேற்கொண்ட முக்கிய பிரதிநிதி என்ற வகையிலும், முதலிடம் பெற்றுள்ள கட்சியின் முக்கிய பொறுப்பில் உள்ளவர் என்ற வகையிலும், அரசின் அமைச்சர் என்ற முறையிலும் அவரைப்பாதுகாக்கவேண்டிய பொறுப்பு அதிகமாகவே உள்ளது.
எத்தகைய தாக்கங்களைத் தாங்கிக்கொண்டு மேதகு அமைச்சர் வி.முரளிதரன் அவர்களின் அரசியல் முன்னெடுக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது. அரசாங்கத்தின் பார்வைக்கு கொஞ்சம் சறுகினாலும் நன்மதிப்பிழந்து தமிழர்கள் ஆதரவற்று விடுவார்கள்… எதிர்க்கட்சியினர் வீசும் வலையில் சிக்குப்பட்டால், அதனிலும் கேவலமாக பாதிப்பிற்குள்ளாகவேண்டும். தற்போதைய ஆளுங்கட்சியினரின் அரசியலிலே எமக்குவேண்டிய உரிமைகளைப்பெற்றாகவேண்டும். மீண்டும் மற்றய சிங்களக்கட்சிகள் ஆட்சிக்குவந்தால் அதோகதிதான்… ஒற்றுமையில்லாத பல தமிழ்க் கட்சிகள் ஒருபுறம்… புலிகளின் ஆதரவாளர்களின் தகாத செயல்கள் இன்னொருபுறம்…



