காலங்கடந்தும் ஞானம் பிறந்த கதையாக தமிழர்களுக்கு இன்னும் புரியவில்லையா விடுதலையின் பாதைகள்! எந்தவழி மக்களுக்கு நிம்மதியான வாழ்வைக்கொடுக்கும் என்று இன்னுமா புரியவில்லை… இப்போது போர்முடிந்த பின்னர் தமிழர்களின் இழப்பினைக்கணக்கிட்டுப்பாருங்கள்… தமிழர்களுக்கு வழங்கப்பட்டு வரும் உரிமைகளை ஒப்பிட்டுப்பாருங்கள்…
புலிகளிடம் இருந்து ஏராளம் ஆயுத தளபாடங்கள் கைப்பற்றப்பட்டது, 20ஆயிரத்திற்கும் மேலான புலிகள் உறுப்பினர்கள் கைதுசெய்யப்பட்டனர். தமது கட்டுப்பாட்டுக்குள் இருந்த பிரதேசத்தில் அமைப்புக்களையும், மதத்தலைவர்களையும், அரசஊழியர்களையும், மக்களையும் ஆயுதமுனையில் வழிநடத்தினர். அப்படி இருக்கும் போது புலிகள் 30 வருட போராட்டத்தை ஆறுமாதத்திற்குள் தோற்றதற்குக்காரணம் என்ன?
தமது நெருங்கிய சகாவான, இனியபாரதி சிறுவர்களை படையில் இணைப்பதாக ஐக்கிய நாடுகள் சபை, தெரிவிக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டை, தேசிய இன ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்துறை அமைச்சர் விநாயகமூர்த்தி முரளீதரன் மறுத்துள்ளார்.
அரசியல் என்பது வெளிப்படையாகத்தெரியும் விடயமல்ல, ஆனால் ஆயுதப்போராட்டம் இதற்கு மாறுபட்டது. காரணம் போராட்டஅமைப்புக்கள் அரசிற்குக்கட்டுப்பட்டதல்ல, அங்கிகரிக்கப்பட்ட எந்த அமைப்பும் அரசின் சட்டதிட்டத்திற்குக் கட்டுப்படவேண்டிய காரணத்தால், ஒவ்வொரு விடயத்திற்கும் ஏராளம் நடைமுறைகள் இருக்கின்றன. ஒருதலைப்பட்சமாக நடவடிக்கைகளை எடுக்கமுடியாது என்பதனை மக்கள் அறிந்து கொள்ளவேண்டும்.



