புலிகளின் போக்கு தவறு என்பதனை தற்போதைய கூட்டமைப்பினர் வெளியிட ஆரம்பித்துள்ளார்கள்.

January 26th, 2010

பொய்ஞானம் எத்தனை வேகமாகப் போக்கினை அமைத்தாலும், அது மெய்ஞானத்தைப்போல் நிலைக்கமுடியாது…
கருணா அம்மான் புலிகளுடன் இருந்து பிரிந்ததாக குற்றஞ்சாட்டப்படுகின்றார். அவர் அதில் இருந்து பிரிவதற்கு முன் எடுத்த எடுப்பிலேயே பிரிந்தார் என்றால் அக்குற்றச்சாட்டு மிகச்சரியானதே! ஆனால் ஆழ இருந்து அறிக்கைவிட்டு அதற்கும் பதில் தகுந்த முறையில் வராததாலே மக்களினும், போராளிகளினதும், தமிழீழத்தின் எதிர்காலத்தையும் கருத்திற்கொண்டு தன்னை அடைகுவைத்த பொக்கிஷமே தற்போதைய அமைச்சர் வி. முரளிதரன் அவர்கள்.

புலிகளின் போக்கு தவறு என்பதனை தற்போதைய கூட்டமைப்பினர் வெளியிட ஆரம்பித்துள்ளார்கள். உதாரணம்  திரு சிறீகாந் அவர்கள் தமது செய்வியில் புலிகள் மக்களைக்கேடயமாகப் பயன்படுத்தினார் என்பதனை அப்பட்டமாக ஒப்புக்கொண்டுள்ளார். இதனை 06-11-2009 ல் லண்டன் வானொலிக்கு அவர் வழங்கிய செவ்வி ஆதாரமாகும். ஆனால் அதனை தாம் முன்பே அறிவிக்காததற்குக் காரணம் மக்கள் புலத்தில் மேற்கொண்ட போராட்டத்தைச் சிதைவு படுத்திவிடும் என்பதற்காக என்று ஒப்புக்கொண்டுள்ளார்.

இதில்தான் நாம் நிதானமாகச்சிந்திக்கவேண்டும். இத்தகைய நிலை ஏற்படாமல் முன்பே தவிர்த்துக்கொண்ட கருணா அம்மான் மேலா… ஏராளம் மக்களைப்பலிகொடுத்து, பின்னர் புலிகளின் தவறை ஒப்புக்கொண்டு தம்மைத் திடப்படுத்த எத்தணிப்பது மேலா!!!

இவைதான் மேலானது என்று அறியப்பட்டவுடன் அதன் அடிப்படையில் செல்வதாயின் முதலில் சிறந்த தலைமையினைத் தெரிந்தெடுக்கவேண்டும். அதன்மூலமே மக்களுக்கான பாதைகளை நிர்ணயிக்கவேண்டும். இப்போது, பலர் எதிர்க்கட்சியின் வாலைப்பிடித்து தம்மை திடப்படுத்தவும், இத்தனை வருடமாக புலிகளின் பலத்தை அதிகரித்து தமிழர்களையும் சிங்களவர்களையும் பிணக்குக்கள்ளாக்கி, 30வருட பின்னடைவிற்குள் கொண்டுசென்ற எதிர்க்கட்சியினருக்கு ஆதரவு வழங்குவது என்பது கேவலமாக இல்லை!!! இதில் அவர்களை அழைத்து புலத்தில் பேட்டிகள் வேறு இடம்பெறுகின்றது. இந்த வேளையில் திரு அமரர் பிரேமதாசாவின் மரணத்தை அதாவது அரசியல் படுகொலைதன்னை நினைவுபடுத்த விரும்புகின்றேன்.

எனவே தமிழர்களுக்கு நிலையான, சமாதான, சுபீட்ஷ, உரிமையுடைய வாழ்வை யாருடைய வழி எடுத்துக்கொடுக்கும் என்பதனை மக்கள் சிந்திப்பதற்கு காலங்கனிந்துள்ளது. புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த போலு புலத்தில் வாழும் மக்களுக்கும் சரி இலங்கையில் வாழும் மக்களுக்கும் சரி உண்மைகள் மறைக்கப்பட்டுவந்தமை குறிப்பிடத்தக்கது. இப்போதும், ஏராளமான விடயத்தை புலத்தில் வாழும் மக்களுக்கு மறைத்தே தகவலை வெளிக்காட்டுவதும் திரிபுபடுத்தி சம்பவங்களை அறிவிப்பதும் புலத்து ஊடகங்களுடைய வருமானம்தழுவிய போக்ககக்காணப்படுகின்றது. எனவே மக்கள் உண்மையின் பக்கம் பார்ப்பது என்பது அவ்வளவு சுலபமல்ல!,

முப்பது வருட புலிகளின் வருமானத்தை ஒரு புலிகளின் ஆதரவாளர் அறிவாராயின் அவர் மண்டைவெடித்தே இறந்து விடுவார். அதேபோல் புலிகளுக்காக கடமையில் ஈடுபடும் புலத்தவர்கள் கையாளும் கையாடல்களை சாதாரண குடிமகன்கள் அறிந்தால் அவர்களின் நிலை என்னவாகும். புலிகளுக்கு ஆதரவாக செயற்படும் பல அமைப்பாளர்கள் வேலையே செய்வதில்லை ஆனால் தனி நபர்கள் மாதாந்த தொழிலில் பெறும் ஊதியத்தில் தமது வாழ்க்கைத்தரத்தை உயர்த்துவதிலும் பார்க்க அவர்களுடைய வாழ்க்கைத்தரம் மிகவும் உயர்ந்து காணப்படுகின்றது. குழந்தை வழர்ப்பிலுங்கூட தமது பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்பிவிட்டு, மக்களை போராட்டத்தில் பங்குபெற அழைப்பது பல மக்களுக்குத்தெரியாததொன்று. தமது பிள்ளைகள் உயர்ந்த தரமுடைய பாடசாலைகளில் கல்விகற்பர் ஆனால் சாதாரண மக்களின் பிள்ளைகள் அவற்றை ஈடுசெய்யமுடியாத நிலையிலும் போராட்டத்திற்கு நிதி வழங்குகின்றனர். போராட்டத்திற்கு நிதி வழங்கியோர் பட்டியலில் புலிகளின் ஆதரவாகப்புலத்தில் ஈடுபட்டோரின் அதாவது, அமைப்பாளர்களின் பெயர்கள் இருக்கின்றதா என்றால் அது கேள்விக்குறிதான். ஆவையெல்லாம் வெளிமக்களுக்குத்தெரிவதில்லை…

கடந்த காலத்தில் புலிகளின் தலைவரின் ஆடம்பர வாழ்க்கைபற்றியும், அவரின் வாரிசுகளின் கல்விநிலைதொடர்பாகவும் பல விடயங்களை வெளிக்கொணரக்காரணம் மறைக்கப்பட்ட உண்மைகளேய!!! புலிகளின் கட்டுப்பாட்டில் பல லக்சூரி கட்டிடங்கள் இருந்தமையும் புலிகளின் அலுவலகங்களுக்குள் இருந்த வசதிவாய்ப்புனக்களும் மக்கள் அறியாதவை… இறுதியாக தம்மைக்காப்பதறங்காக மனக்களை விடுவிக்காது அரசை குற்றஞ்சாட்டி அம்மக்களை அழித்தமை இன்னமும் வேதனையினைத்தருகின்னது. இவ்வாறான நிலையில் இருந்து தமிழர்களைக்காக்கவே அம்மான் முன்னெடுப்புகளை நிதானமாகச்சிந்தித்து அடிகளை எடுத்துவைத்தார்.  இறுதியாக அந்த வழிதான் நிலையானது என்பதும், அதேவழிக்குத்தான் அனைத்து தமிழ்க்கட்சிகளும் வந்தாகவேண்டும் என்பதும் தெளிவாகின்றது.

பிரிந்து வந்த பின்னர்கூட தம்மோடு இருந்தவர்களுக்க அரசியல் வாழ்க்கையினைக் கற்றுக் கொடுத்ததும், பதவிக்காக கட்டுக் கோப்பைக் கலைத்து எதிர் செயற்பாடுகளைச் செய்து தம்மை மக்கள் மத்தியில் ஒரு உயர்ந்த மனிதராக்குவதற்கு முயற்சித்தோரையும் மக்கள் நன்கு அறிவார்கள். அவர்கள் கூட அம்மானின் வழிக்கே வந்தாகவேண்டும் என்பதனை கடந்த காலங்கள் வெளிப்படுத்தியுள்ளது.

அரசியல் என்பது வெளிப்படையாகத்தெரியும் விடயமல்ல, போராட்டம் இதற்கு மாறுபட்டது. குhரணம் போராட்டஅமைப்புக்கள் அரசிற்குக்கட்டுப்பட்டதல்ல, ஆனால் அங்கிகரிக்கப்பட்ட எந்த அமைப்பும் அரசின் சட்டதிட்டத்திற்குக்கட்டுப்படவேண்டிய காரணத்தால் ஒவ்வொரு விடயத்திற்கும் ஏராளம் நடைமுறைகள் இருக்கின்றன. ஒருதலைப்பட்1மாக நடவடிக்கைகளை எடுக்கமுடியாது என்பதனை மக்கள் அறிந்து கொள்ளவேண்டும்.

பொறுமையுடன் ஒவ்வொரு அடிகளையும் மக்கள் கூர்ந்து அவதானிக்கவேண்டும். குடினமான விடயமாக்ருந்தாலும் அதனை மேற்கொண்டே ஆகவேண்டும்.  கூர்ந்து கவனிக்காத பலவிடயங்களை மக்கள் தவறாகக்கூடப்புரிந்துகொள்ள வாய்ப்புண்டு அந்த அவதானிப்பில் ஒன்றே முன்பு கருணா அம்மானை பற்றிய குற்றச்சாட்டுக்கள்… அதனை மக்கள் முறையான நகர்வு என்று பல காலத்தின்பின்னரே அவதானித்தார்கள் என்றால், உண்மைநகர்வுகளுக்கு அதாவது அரசியல் நகர்வுகளுக்க பல நடைமுறைகளைத்தாண்டியே செல்லவேண்டியதால் மக்கள் பொறுமைகாப்பதோடு, தமது ஆதரவையும் ஒத்துளைப்பையும் நல்கவேண்டும். ஆவரால் நிர்ணயிக்கப்படும் தெரிவாளர்களை, வேட்பாளர்களை வெற்றிபெறச்செய்யவேண்டும். இதன்மூலம் தமிழர்கள் இழந்த இழப்புக்களையும் உரிமைகளையும் நிச்சயமாக மீழப்பெறமுடியும்.  

இன்று பலபாரிய அரசியல் முன்னகர்வுகள் அம்மான் அவர்களால் தமிழர்களுக்காக எடுக்கப்பட்டுவருகின்றது. இது அபிவிருத்திபோன்று அன்றன்று வெளிப்படக்கூடிய விடயமல்ல, நிதானமாகச்சென்றாலும் நீண்ட கால நிம்மதிக்கு வழிவகுக்கக்கூடியது. அவை விரைவில் வெளிப்படவிருக்கின்றன. அப்போது மக்களும் தமிழ் அரசியல் கட்சிகளும் உணர்ந்து கொள்வார்கள் அப்போது அம்மானின் அடிகளின் முடிவு தெளிவாகும். அப்போது யார் மக்களுக்காக பாடுபடுவோர்கள், யார் பதவிக்காக திண்டாடுவோர்கள் யார் தமது வருமானத்திற்காகவும், கையாடல்களை மேற்கொள்வதற்காகவம் தம்மை ஈடுபடுத்துவோர்கள் என்பதும் புலப்படும். அனைவரும் சமத்துவமாக,  உயிராபத்தின்றி வாழக்கூடிய வழியிலே செல்வதற்கான அடிகளையே அம்மான் எடுத்துள்ளார் என்பது மக்களுக்கு அப்போது புரியும். 

அவை இப்போதே புரிந்தால் தேவையற்ற இழப்புகளையும் தமிழ் அரசியல்வாதிகளிடையே அரசியல் சதிகளையும் அறவே ஒழித்துவிடலாமல்லவா????

இதன்மூலம் தமிழர்களின் நிரந்தவ விடிவிற்கு அடித்தளம் இப்போதிருந்தே ஆரம்பித்துவிடுமல்லவா???…!!!

Comments are closed.

Filled Under: புலத்தான்
ammaan on livestream.com.

செய்தித் தலைப்புகள்