சாமானியமான பாமரர்களிடமும் அரசியல் சாணக்கியம் இருக்கலாம்- புலத்தான்.

January 29th, 2010

4240404102_2b66b7dd33விரைவில் நடக்கவிருக்கும் பாராளுமன்றத் தேர்தலிலாவது அரசியல் சாணக்கியத்துடன் தமிழர்கள் நலம் பெறக்கூடிய வகையில் பால் தம்மை அக்கறை காட்டுமாறு கூட்டமைப்பினையும், மற்றைய தமிழ் அமைப்புக்களையும், புலத்தில் தலைவிரித்தாடும் தமிழ் ஆர்வலர்களையும் கேட்டுக்கொள்கின்றோம். இணைந்து செயற்படுங்கள்…! இணைந்து செயற்படுங்கள்…! என்று கூவுவதை விட்டு பலமுள்ள, பதவியுள்ளோர்களை சார்ந்து நல்லதொரு முடிவினை எடுக்க முன்வாருங்கள்.

அதிகாரம் இருப்பவர்களை நாம்தான் தேடி போகவேண்டுமேயொழிய அதிகாரம் இருப்பவர்கள் தேடிவருவார்கள் என்பது பொய்ச்சாட்டுக்கள். தமிழர்களின் விடிவிற்காக ஒருங்கிணைந்து போராடுங்கள் … முன்பு இது தொடர்பாக வெளியிட்ட ஆக்கம் ஒன்றை மீண்டும் நினைவுபடுத்த விரும்புகின்றேன்.

வாங்க தமிழ் மக்களே! உங்களுக்கான பெரும் பங்களிப்பில் நீங்களும் கலந்து கொள்ளுங்கள். ஆரம்பகாலத்தில் இருந்து அகிம்சைமூலம் பெறமுடியாதிருந்த பல்வேறு உரிமைகளை நிரந்தரமாகப்பெற்றுக்கொள்ள கிடைத்துள்ள அரிய சந்தர்ப்பமே இத்தேர்தல். இதில் தறவான பாதைகளைத் தெரிந்தெடுத்து மேலும், தமிழர்களின் இனநெருக்கடிக்கு தீர்வு காஒக்கிடைத்த சந்தர்ப்பத்தை நழுவவிடவேண்டாம். கடந்த காலத்தில் மேற்கொண்ட அதே பிளையினை மீண்டும் மீண்டும் தவறான வழிநடத்தலில் சில கட்சிகள் கொண்டு செல்லப்பார்க்கின்றார்கள்… 

 

அம்மானின் ஆரம்பகால அடிகளைப் புரிந்து கொள்ள முடியாதவர்கள் பல்வேறு அவதூறுகளை ஏற்படுத்த நினைத்தாலும் அறிவுடைய எம் மக்கள் மத்தியில் அது பலிக்காமல் போனதென்பது உண்மையே!!! அரசியல் சதுரங்கத்தில் இறுதி முடிவு விடிவிலே சென்றடையவேண்டும் அதிலும் எவ்வித இழப்பும் இல்லாமலும், எதிர்கால தலைமுறைக்கு பாதிப்பு இல்லாமலும் இருக்க வேண்டும். அதே வழியைத்தான் அம்மான் அவர்கள் பல பரிட்சையின் பின்னர் தேர்ந்தெடுத்தார்.

தற்போது அனைத்து தமிழ்க்கட்சிகளும் அதற்கான அடிகளை எடுத்துவைத்தாலும் அவர்கள் சேற்றில் காலை வைத்து பின்னர் கழுவ முயற்சிக்கலாம் என்பதே அவர்கள் எண்ணம். ஆதை இப்போதே சிந்தித்து செயற்படும்படி வேண்டுகின்றோம்.

தேர்தல் காலத்தில் பேசப்படுகின்றவை எல்லாம் காகிதக்கப்பலே!!! அதை கல்வெட்டுப்போல் பொறித்துச் செயற்படுவோர்கள் மிகக்குறைவே. இதில் தற்போதைய அரச தலைவர் மாறுபட்டுக்காணப்படுகின்றார். அவரின் போக்கு தமிழர்களின் கைகளில் தற்போது தங்கியுள்ளது என்பது அப்பட்டமான உண்மையே!!!

தமிழர்களின் வாக்குகளை பிரித்து தற்போதைய தலைவரை தோற்கடிக்கலாம் என்கிழன்ற சிலருடைய எண்ணம் தவிடுபொடியாகப்போகின்றது. இதனால் இழக்கப்போவது, தமிழர்களுடைய ஒருங்கிணைப்பே!!!

முஸ்லீம் மக்கள் என்ற பிரிவே தகுந்ததல்ல, அதுபோலவே சிறுபான்மை சிறுபான்மை என்று பிரிவு காட்டுவதை தற்காலிகமாகவேனும் நிறுத்திவைத்து தமிழர்களின் முழுபலத்தையும் காட்டி இத்தேர்தலை கூட்டமைப்பும் முஸ்லீம் கட்சிகளும் மற்றைய தமிழ்க்கட்சிகளும் கங்கணம் கட்டவேண்டும்.

நாம் இழந்தவை எண்ணிலடங்காதவை,… இனிநாம் பெறப்போகும் உரிமைகளும் என்றும் இல்லாதவாறு மாறவேண்டும் என்றால், எமது போக்கில் மாற்றங்கள் தேவை! அது நிரந்தர தமிழர்களின் உரிமைகளைப் பெறும் அளவிற்கு அமையவேண்டும்.

தமிழீழம் தமிழீழம் என்று மன்றாட்டுக்களை சொன்னால் அது கிடைத்துவிடுவதில்லை, அதற்கு நியாயமான சர்வதேச சட்டத்திற்கு இணங்க கோரப்படும் போது, அது இலகுவாக கிடைக்க வாய்ப்புண்டு. “கொசேவோ” நாடுபற்றி அதிகமாகப்பேசப்பட்டது யாவருக்கும் தெரிந்ததே. ஆனால் அது தற்போது சர்வதேசத்தால் அங்கிகரிக்கப்படுவதில் இருந்து பாரிய இழுபாட்டில் இருக்கின்றது. அது போலவே! எதிர்க்கட்சியினர், பேச்சு என்ற பந்தைக்காட்டி காட்டி மோசம் செய்யப்பார்த்தனர் தமிழர்களையும் தேசத்தையும் அந்த வலையில் தற்போதைய பொது வேட்பாளரும் மாட்டிக்கொண்டனர். இனி அந்த வலையில் தமிழர்கள் விழாதிருக்க இன்னும் காலங்கள் இருக்கின்றது. விழித்தெழுங்கள்… புலத்தான்

Comments are closed.

Filled Under: செய்திகள்
ammaan on livestream.com.

செய்தித் தலைப்புகள்