அணுகுமுறையில் தவறுண்டு என்பதனை தமிழ் மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

February 3rd, 2010

அரசியல் என்பது வெளிப்படையாகத்தெரியும் விடயமல்ல, ஆனால் ஆயுதப்போராட்டம் இதற்கு மாறுபட்டது. காரணம் போராட்டஅமைப்புக்கள் அரசிற்குக்கட்டுப்பட்டதல்ல, அங்கிகரிக்கப்பட்ட எந்த அமைப்பும் அரசின் சட்டதிட்டத்திற்குக் கட்டுப்படவேண்டிய காரணத்தால், ஒவ்வொரு விடயத்திற்கும் ஏராளம் நடைமுறைகள் இருக்கின்றன. ஒருதலைப்பட்சமாக நடவடிக்கைகளை எடுக்கமுடியாது என்பதனை மக்கள் அறிந்து கொள்ளவேண்டும்.

பொறுமையுடன் ஒவ்வொரு அடிகளையும் மக்கள் கூர்ந்து அவதானிக்கவேண்டும். கடினமான விடயமாக்ருந்தாலும் அதனை மேற்கொண்டே ஆகவேண்டும்.  கூர்ந்து கவனிக்காத பலவிடயங்களை மக்கள் தவறாகக்கூடப்புரிந்துகொள்ள வாய்ப்புண்டு. அந்த அவதானிப்பில் ஒன்றே முன்பு தமிழ் அரசியலில் குதித்துள்ள அனைவரையும் சாரும். அவர்களின் அன்னநகர்வினை மக்கள் முறையான நகர்வு என்று பல வேளைகளிலும், முறையற்ற நகர்வென்று சில வேளைகளிலும் எடுத்துக்கொள்கின்றனர். எனினும் அந்த எடுகோள்கள் எப்போது என்பதில் பலத்த வினா தொக்கிநிற்காமலில்லை.

உண்மைநகர்வுகளுக்கு அதாவது அரசியல் நகர்வுகளுக்கு பல நடைமுறைகளைத்தாண்டியே செல்லவேண்டியதால் மக்கள் பொறுமைகாப்பதோடு, தமது ஆதரவையும் ஒத்துளைப்பையும் நல்கவேண்டும். ஆனால் அது யாருக்கென்பதுதான் பெரும் சிக்கல்!!! அத்தோடு எக்காலத்தில் என்பதும் பெரும் சிக்கலே!!! புலிகளுக்கு ஆதரவு வழங்கிப்பார்த்தார்கள்… கூட்டமைப்பிற்கு ஆதரவு வழங்கிப்பார்த்தார்கள்… இரண்டு முடிவும் தமிழர்களின் நிரந்தர விடிவிற்கு வழி கோலவில்லை. எனவே ஏதொஒரு அணுகுமுறையில் தவறுண்டு என்பதனை அரசியல் வாதிகள் புரிந்து கொள்கின்றார்களோ இல்லையோ தமிழ் மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

தற்போது உள்ள நிலையில் தமிழர்கள் முழுதும் அதிபர் மகிந்தாவிற்கெதிராக தமது வாக்குகளைப் போட்டாலும் அதனால் மகிந்தா தோற்கப்போவதில்லை என்பதனை இப்போதல்ல புலத்தான் ஆக்கங்கள் பல தடவைகள் வெளிக்காட்டின என்பதனை நினைவு படுத்த விரும்புகின்றேன்.

Comments are closed.

Filled Under: செய்திகள்
ammaan on livestream.com.

செய்தித் தலைப்புகள்