காலங்கடந்தும் ஞானம் பிறந்த கதையாக தமிழர்களுக்கு இன்னும் புரியவில்லையா விடுதலையின் பாதைகள்! எந்தவழி மக்களுக்கு நிம்மதியான வாழ்வைக்கொடுக்கும் என்று இன்னுமா புரியவில்லை… இப்போது போர்முடிந்த பின்னர் தமிழர்களின் இழப்பினைக்கணக்கிட்டுப்பாருங்கள்… தமிழர்களுக்கு வழங்கப்பட்டு வரும் உரிமைகளை ஒப்பிட்டுப்பாருங்கள்…
இத்தனைகாலமும் 25வீதம்தான் தமிழர்கள் என்று இருந்த காலத்தில் பலமுள்ள கட்சி என்று தமிழர்கள் மத்தியில் யாதும் இல்லாது இருந்தது. ஆனால் இன்று இலங்கையின் பலமான கட்சியில் முக்கிய பொறுப்பு ஒரு தமிழ் தலைவனுக்குக்கிடைத்துள்ளதென்றால் திழர்களின் உரிமையைப் பெற்றெடுக்கும் காலம் தொலைவில் இல்லை என்பது இன்னுமா உங்களுக்குப்புரியவில்லை.
அரசியல் வாதிகள் என்போர் ஒருபுறம், தேசபற்றாளர் என்பது இன்னொருபுறம்… தூரநோக்குடைய இரு தேசப்பற்றுடைய தேசியத் தலைவர்களின் வழியில் இரு இனமும் மும்மதமும் ஒற்றுமையாகக் கால்பதிக்கும் காலத்தில் நாம் விழிபதித்துள்ளமை எமது இனத்திற்குப் பெருமையும் சிறப்புமே!!! ஆரம்பகாலத்தில் சில சிங்களத்தலைவர்களின் முறையற்ற செயலினை தற்போதைய அரசின் தலைவரான உயர் மதிப்பிற்குரிய, 2009ற்கான சாமாதானத்திற்கான விருதினைப் பெறத்தகுதியுடைய மேன்மேதகு மகிந்த அவர்கள் முறையாகக்கையாண்டு தமிழர்களுக்கான உரிமைகளைப் பெற்றெடுக்க உறுதுணையாக இருப்பது எமக்குக்கிடைத்த அருமருந்தாகும். அதனை நன்முறையில் பயன்படுத்திய அமைச்சர் மேதகு விநாயக மூர்த்தி முரளிதரன் அவர்கள் எதிர்காலத்தில் மக்கள் மனதில் நீங்காமல் அவருக்கென்று தனி இடத்தைப் பெறப்போகின்றமை யாராலும் தடுக்கமுடியாது.
அரசியலை நன்கு நுணுக்கமாக அறிந்த இருதலைவர்களும் ஒருங்கிணைந்த தேசியத்தைக்கட்டியெழுப்புவார்கள் என்பதனை இன்று நகர்ந்து கொண்டிருக்கும் அரசியல் சதுரங்கம் தெளிவு படுத்துகின்றது. இதனை இத்தனைகாலமும் ஏமாத்திப்பிழைத்தவர்கள் மக்களை தகாத வழிக்குக்கொண்டுசெல்ல முனைவது தேசிய ஒருமைப்பாட்டைக்குலைப்பதாகும். இது கட்சிகளுக்கும் பொருந்தும். எனவே கட்சிகளும் தலைவர்களும் மக்களும் ஒன்றிணைந்து செயற்பட்டால் விரைவில் எமது இலங்கை அன்னையும் மிப்பெரிய சாதனைகளைச் சாதிப்பாள் என்பதில் ஐயமில்லை.
போராட்டத்தில் காட்டிய அதேவேகத்தை நாட்டின் அபிவிருத்தியில் காட்டிப்பாருங்கள்!!! எமக்கு
இத்தனைகாலமும் கிடைக்காத உரிமைகள் கைக்கெட்டிய கனியாக சுவைக்கமுடியும். எமது இனத்தவரும் ஒலிம்பிக்கில் பல பதக்கங்களை பெறுவார்கள்… எமது தேசியத்தவரும் உலகில் பிரமிக்கக்கூடிய உயர்ந்த பீடத்தில் இருப்பார்கள்… எமது சிறுவர்களும் கல்விக்கனவினை நினைவாக்குவார்கள்…
நாட்டின் அபிவிருத்தியின் சுட்டென் மிக உயர்ந்த நிலைக்குச் செல்லும் என்பது கனவல்ல என்பது தெரியவரும். இன மாத மொழி வேறுபாடின்றி அனைவரும் ஒரே குலமாய் நாட்டின் சிறப்புக்காகப்பாடுபடவேண்டும் என்பது அனைவரின் குறிக்கோளாக அமைய வேண்டும்.
நாட்டின் விடுதலைக்காய் உயிர்த்தியாகம் செய்தஇரணுவத்தினர் பூஜிக்கப்படவேண்டியவர்கள். தவறான தலைமையினால் தம்மை அழிவின் பாதைக்குச் செலுத்திய போராளிகள் பொதுமக்கள் அனைவரும் இலங்கை அன்னையால் மதிக்கப்படவேண்டும். இதன்மூலம் தேசியப்பற்றுக்காக தம்மை தவறான முறையில் கால்பதித்தவர்களுக்கு பொது மன்னிப்பு வழங்கி உண்மையான தேசியத்திற்காகப் போராட அவர்களுக்கு சந்தர்ப்பம் வழங்கப்படவேண்டும். இன்னும் சரணடையாத முன்னாள் போராளிகள் தமது போக்கினை மாற்றியாகவேண்டும். இதற்கு ஆங்காங்கு சிதறியுள்ள போராளிகள் தம்மை வெளிப்படுத்தி புதிய வாழ்விற்குச் செல்ல வேண்டும்.
புலத்தில் தவறான முறையில் சென்று மக்களை ஏமாற்றியவர்கள் தமது செயற்பாட்டினை நிறுத்தியாகவேண்டும். நாட்டின் தேசிய ஒற்றுமைக்காக ஒன்று சேர்ந்து போராடவேண்டும். குற்றச்செயல்களுக்கு உடந்தையாக இருக்கும் ஊடகங்களும் தம்மை திருத்திக்கொள்ளவேண்டும். மக்களின் மனதில் நஞ்சினைத்தூவாது அவர்களின் எதிர்காலத்திற்காகப்பாடுபடவேண்டும்.
எனவே தற்போது ஆழுமைசெய்து கொண்டிருக்கும் மான்புமிகு அமைச்சர் வி.முரளிதரன் அவர்களுக்கு தமிழர்கள் அனைவரும் உங்கள் கரங்களை கொடுத்து ஆதரிக்க வேண்டுகின்றோம். தமிழ்க்கட்சிகள் தங்கள் ஒற்றுமையினை அவருக்குக்காட்டி அவரால் எடுக்கப்படும் எதிர்காலத்திட்டம் நோக்கிய விடிவின் பாதைக்குத் தோள்கொடுக்க வேண்டுகின்றோம்.



