புலத்தில் சில இணையங்கள் மக்கள் மத்தியில் தகாத விடயங்களையே செய்திகளாக வெளியிட்டு வருகின்றன… அதாவது, பின்வரும் செய்தியில் எவ்வளவு உண்மை இருக்கின்றது என்பதனை தற்போது மக்கள் ஒப்பிட்டுப்பார்த்து செய்திகளை இனங்காணவேண்டும். இதன்மூலம் மட்டுமே உண்மையான ஊடகங்களை மக்கள் வளர்த்தெடுக்க வேண்டும்.
“தேசியப் பட்டியலில் கருணாவை இலங்கை நாடாளுமன்ற உறுப்பினராக்கிய அரசாங்கம், பின்னர் தமது கட்சியின் பிரதிச் செயலாளர் என்ற பதவியையும் கொடுத்து அமைச்சராக்கியது. ஆனால் இம்முறை கருணாவுக்கு தேசியப் பட்டியலில் இடம் அளிக்கப்படமாட்டாது எனக் கூறியுள்ளது அரசு. அவரைத் தேர்தலில் போட்டியிடுமாறு அரசு கேட்டும் கூட, கருணா அதற்கு உடன்படவில்லை. இப்போது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மட்டக்களப்பு வேட்பாளர் பட்டியலும் தயாரித்து முடிக்கப்பட்டுவிட்டது.
அப்படியாயின், கருணாவுக்கு என்னதான் முடிவு என விசாரித்தபோது, தேசிய பட்டியலில் கருணாவை நாடாளுமன்ற உறுப்பினராக அரசு அறிவிக்காவிட்டாலும், அரசாங்கத்தில் வேறு ஒரு பதவி வழங்கப்படும் என்று அவருக்கு உறுதி கொடுக்கப்பட்டுள்ளதாம். அவரும் அதை நம்பி காத்திருக்கிறாராம் எனத் தகவல்கள் கிடைத்துள்ளன. தேர்தலில் போட்டியிட்டால் தாம் படுதோல்வியடைய நேரிடும் என்பதை கருணா நன்கு உணர்ந்திருக்கிறார் என்பது தெரிகிறது.
எப்படியாவது ஒரு ஆறுதல் பரிசு உண்டு என மகிந்த இடப்போகும் எலும்புத்துண்டுக்காக காத்திருக்கிறார் கருணா. தேர்தல் முடிந்த பின்னர் இவரை இலங்கை அரசு சுலபமாக ஓரம் கட்டும் என்பதில் ஜயமில்லை. ” கேலிக்கையே தமிழர்களின் வாடிக்கையாச்சு, இவ்வாறு ஒரு இணையம் ஆக்கத்தைவெளியிட்டிருந்தது. அது உண்மையில்லை என்பதும் மக்களுக்கு சரியான தகவல்களை வழங்குவதில்லை என்பதனையும் இப்போது அரசு வெளியிட்டு தேசிய பட்டியல்தகவல்கள் காட்டுகின்றது. கிழக்கையும் வடக்கையும் பிரித்து தமிழர்களின் பலத்தைக்குறைக்கப்பார்க்கின்றனர் பல புலத்துத்தமிழர்கள். மக்கள் விழிப்பாக இருந்து உண்மைத்தகவல்களை இனங்காணவேண்டும்.
பட்டியலில் வரும் உறுப்பினர்கள் ..
(01) ரத்னசிறி விக்கிரமநாயக்க
(02) டி.எம்.ஜயரத்ன
(03) டளஸ் அளகப்பெரும
(04) பேராசிரியர் ஜீ.எல.பீரிஸ்
(05) எம்.எச்.மொஹமட்
(06) பேராசிரியர் விஸ்வ வார்ணபால
(07) டியூ குணசேகர
(08) பேராசிரியர் திஸ்ஸ வித்தாரன
(09) கீதாஞ்ஜன குணவர்தன
(10) எல்லாவல மேதானந்த தேரர்
(11) முத்து சிவலிங்கம்
(12) ஷண்முகம் ஜகதீஸ்வரன்
(13) அசல ஜாகொட
(14) எம்.எப்.எம்.முஸம்மில்
(15) டப்ளியூ.ஜே.எம்.லொக்குபண்டார
(16) விநாயகமூர்த்தி முரளீதரன்
(17) அநுருத்த ரத்வத்தே
(18) ஓமல்பே சோபித்த தேரர்
(19) ஜே.ஆர்.பீ.சூரியப்பெரும
(20) ஜே.எம்.ஜே.பிரியந்த பண்டார
(21) பேராசிரியர் ராஜீவ் விஜேசிங்ஹ
(22) லெஸ்லி தேவேந்ர
(23) சந்திரசேகரன் ஷண்முகநாதன்
(24) ஏ.எச்.எம்.அஸ்வர்
(25) மாலனீ பொன்சேகா
(26) கலாநிதி ஹரிச்சந்ர விஜேதுங்க
(27) சரத் கோன்கஹகே
(28) யூ.எல்.ஷாஹூல் ஹமீத்
(29) கமலா ரணதுங்க



