புலத்தில் நடப்பது நாடுகடந்த அரசா, நாடு கடத்தப்பட்ட அரசா???
புலிகளின் பாரிய பின்னடைவிற்குப்பின்னர், புலிகளின் சார்பில் புலத்தில் தம்மையும் தம்குடும்பத்தையும் பலப்படுத்தி வண்டியோட்டிக்கொண்டிருந்தவர்களுக்கு வருகின்ற தேர்தல் முடிவிற்குப்பின்னர் பெரிய ஆப்பு விளப்போகின்றது.
வருகின்ற தேர்தலில் மகிந்த அரசு 6ல் 4 பெரும்பாண்மையினைப் பெறப்போகின்றது. காரணம் தமிழ்க் கட்சிகளும் தமிழ், தமிழ் சுயேட்சை வேட்பாளர்களும் மக்களின் வாக்குகளின் பலத்தைக்குறைத்து விட்டார்கள்.
இதன்மூலம், சிங்கள மக்களின் வாக்குபலம்மட்டுமே ஆட்சியில் அமரப்போகின்றது. இதனால், மகிந்தவுடைய அரசியல் அதிகாரத்தால் பாரளுமன்ற உறுப்பினர்களையும் அமைச்சர்களையும் தேர்ந்தெடுக்கும் சந்தர்ப்பம் இலங்கை அதிபருக்கு மட்டுமே கிடைக்கப்போகின்றது.
தமிழர்களின் பலத்தை தமிழ் தலைவர்களே அழித்து ஒழித்துவிட்டார்கள். நல்ல வேளை தமிழீழம் கிடைக்கவில்லை! கிடைத்திருந்தால், மக்கள் தொகையிலும் பார்க்க கட்சிகளின் தொகையும், வேட்பாளர்களின் தொகையுமே அதிகமாக காணப்பட்டிருக்கும்.
இது அப்படியிருக்க புலத்தில் நடந்து கொண்டிருக்கும் நாடுகடந்த தேர்தலுக்கான நிலையிலிருந்த ஒரு விடயத்தைத்தெளிவாகப்புரிந்து கொள்ளக்கூடியதாக இருக்கின்றது. அதாவது, தமிழர்கள் அகத்தில் மட்டுமல்ல புலத்திலும் குழம்பியபடியே இருக்கிறார்கள். இதுதொடர்பாக பல முக்கிய விடயங்கள் இன்னும் வரவிருக்கின்றது… – இன்னும் வரும் - புலத்தான்….



