உறுதிப்படுத்தாத தகவல்களை வெளியிடுவது ஊடகத்துறைக்கு ஏற்றதல்ல!!!

March 6th, 2010

Webவணக்கம் இணைய அன்பு நெஞ்சங்களே!!!
இப்போது காலம் தலைகீழாகிவிட்டது, இப்போதும் ஆயதப்போராட்டத்தின் அழுத்தங்களை வைத்து தமிழர்களின் அழிவிற்கு வழிதேடாமல் நல்லரசியல் மூலம் பாதைகளை அமைப்போம் என்றால் அதற்கு அதற்கு ஆயிரத்தெட்டு வியாக்கியானங்களை தற்போது இணையங்கள் வெளியிடுகின்றன.

 இதில் ஒருவிடயம் என்னவென்றால், இணையத்தை யார்வேண்டுமென்றாலும் ஆரம்பிக்கலாம் என்ற ஒரேகாரணத்தால், தாமே ஒரு மின்னஞ்சலை உருவாக்கி தமக்கே அனுப்பியும் தேவைக்கேற்ப பழிகளை சுமத்தியும், ஒருவரைக் கேவலப்படுத்தவும் அதேவேளையில் மிகைப்படுத்தவும் முடியும் என்பதனை இன்னும் பலர் அறியாமல் இருக்கின்றனர்.

ஒரே பெயரில் பல இணைப்புகளை கொண்டு மின்னஞ்சல்களை உருவாக்கமுடியும். அதற்காக எல்லாம் ஒரே நபருடையது என்பது முட்டாள்தனமில்லையா.

ஒரு உத்தியோக பூர்வ விடயம், அதற்கான உத்தியோக பூர்வ தளத்தின்மூலமே உறுதிப்படுத்தப்படவேண்டும்.

அது அவ்வாறாகில் இணையங்களில் இன்னார் இவ்வாறு சொன்னார் என்னால் அது உத்தியோக பூர்வமாக அமையவேண்டும் இல்லையா???  உதாரணமாக ஒருவருடைய பெயரை இணைத்து  
.com அல்லது, .in  அல்லது, .fr அல்லது, .de, … … ….  இவ்வாறு எதுவேண்டுமென்றாலும் இணைத்து பெறமுடியும் அதற்காக அவை அனைத்தும் குறிப்பிட்ட ஒருவருடையது என்பது முட்டாள்தனமில்லையா???
 
தமிழ் மக்களின் நலன் விரும்பாதோர். புலிகளை தமிழர்களின் ஏக பிரதிநிதிகள் என்றார்கள்… கூட்டமைப்பினை ஏக பிரதிநிதியென்றார்கள்… நாடுகடந்த அரசு என்றார்கள்,… வட்டுக்கோட்டை என்றார்கள்…  இப்போது, ஏராளம் பிரதிநிதிகள் தம்மையே ஏக பிரதிநிதியென்கின்றார்கள். யாரென்றாலும் வரட்டும் எதுவென்றாலும் செய்யட்டும் அது மக்களுக்கு நன்மையானால் அதுவே மகிழ்ச்சி.

ஆனால் தமிழர்கள் தம்மையே தாழ்த்தி பிற இனத்தவரை உயர்த்தி செல்கின்றனர். அதாவது ஆரம்பத்தில் சில தலைமைகளுக்கிடையில் ஏற்பட்ட மனக்கசப்பினை வைத்து தேவையற்ற வதந்திகளை இணையங்கள் மூலம் வெளிக்காட்டினர்.

இப்போது சில தலைமைகள் தமக்குள்ளே பிரிந்ததையிட்டு, இணைந்திருக்கும் தலைவர்களை பிரித்தெடுக்கப்பார்க்கின்றார்கள். கடந்த மாதங்களின் பல இணையங்கள் உத்தியோக பூர்வ இணையங்கள் என்று தம்மை அறிமுகப்படுத்தி, சடுதியாகவே செயலற்றுக் கிடக்கின்றன… அவற்றையும் புலத்தில் வாழும் மக்கள் நம்பத்தான் செய்கின்றார்கள்.

காரணம் நினைத்துப்பார்க்கமுடியாத மாற்றத்தையே கடந்த காலங்களில் புலிகளுக்காதரவாக செயற்பட்டவர்கள் பெற்றுக்கொண்டார்கள் என்பது உண்மையே அதுபோல தமிழர்களும் சொல்லொண்ணாத்துயர் அடைந்துள்ளார்கள் என்பதும் மறைக்கமுடியாதது.

தற்போது மக்களுக்கு நன்மைகிடைக்கின்றதோ இல்லையோ கருணாவும் பிள்ளையானும் இணையக்கூடாது என்று கங்கணம் கட்டியபடி பலர் இணையங்கள் மூலமும், வேறு வழிகள் மூலமும் மக்களை தூண்டப்பார்க்கின்றார்கள்.

அது எத்தனைதூரம் போனாலும், இவ்வாறான தற்போதைய அரசியல் தலைவர்களால் மட்டுமே தமிழர்களை மீளவும் நிலைநிறுத்தமுடியும் என்பதனை இணையங்கள் மட்டுமல்ல புலத்தில் இருக்கும் தழிழ்த்தலைவர்களாக நினைக்கும் தமிழர்களும் புரிந்து கொள்ளவேண்டிய பலவிடயங்கள் உள…

எமது இணையத்தின் மூலம் வெளிவராத பல விடயங்களை சில இணையங்கள் தகாத முறையில் தகவல்களை வெளியிடுகின்றமை வரவேற்கத்தக்கதல்ல.

எனினும் மக்கள் அனைத்தையும் தற்போது தீரவிசாரித்தே வருகின்றார்கள் என்பதும் எமக்கு கிடைக்கும் மின்னஞ்சல்களில் இருந்து தெரிய வருகின்றது.

உறுதிப்படுத்தாத தகவல்களை வெளியிடுவது ஊடகத்துறைக்கு ஏற்றதல்ல!!! எனவே இணையங்கள் தகவல்களை வெயியிடும் போது அவற்றை உறுதிப்படுத்தப்பட்ட பின்னர் வெயியிடும்படி வேண்டப்படுகின்றீர்கள். - அம்மான் இணையம். 

Comments are closed.

Filled Under: செய்திகள்
ammaan on livestream.com.

செய்தித் தலைப்புகள்