இன்று (04.03.2010) வாகரை பிரதேசத்தில்…… ஐக்கிய மக்கள் சுதந்திரக்கூட்டமைப்பின் பிரச்சாரக் கூட்டம் 04.03.2010 இன்று ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் உப தலைவரும் தேசிய நல்லிணக்க ஒருமைப்பாட்டு அமைச்சருமான விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா அம்மான்) அவர்களும் மற்றும் கல்குடா தொகுதி வேட்பாளர் சத்தியவரதனும், மட்டக்களப்பு தொகுதி வேட்பாளர் தங்கேஸ்வரியும், பட்டிருப்பு தொகுதி வேட்பாளர் குணரெட்ணம் அவர்களும் பயங்கரவாத யுத்தப்பிரச்சினையால் பாதிக்கப்பட்ட வாகரை, மாங்கேணி, கதிரவெளி போன்ற பிரதேசத்தில் இன்று தங்களின் பிரச்சார கூட்டங்களை நடாத்திவருகிறனர். அத்தோடு யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் தேவைகளை கேட்டறிந்து கொண்டதுடன் இதில் கட்சி அமைப்பாளர்களும் ஆதரவாளர்களும் கலந்து கொண்டதோடு கிராம அபிவிருத்தி சங்கங்கள், மாதர் சங்கங்கள், விளையாட்டுக்கழகங்கள்; வர்த்தக சங்கங்கள் என்பன கலந்து கொண்டனர்.
Filled Under: செய்திகள்



