அமைச்சர் கருணா அம்மான் வாகரையில் பேச்சு….
வடக்கு கிழக்கில் வாழும் தமிழ் மக்கள் கடந்த ஜனாதிபதி தேர்தலில் கூடிய ஆதரவு வழங்காத போதிலும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ தமிழ் மக்களுடன் இன்னும் பெரும் ஆதரவினை கொண்டுள்ளார்.
இவ்வாறு தேசிய நல்லிணக்க ஒருமைப்பாட்டு அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் நேற்று 04.03.2010 வாகரை கட்டுமுறுவு பகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் சிறப்புரை ஆற்றுகையில் இவ்வாறு தெரிவித்தார்.
ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட வேட்பாளர்களை ஆதரித்து அமைச்சர் முரளிதரன் தொடர்ந்து பேசுகையில் எதிர்வரும் 07 ஆண்டுகளுக்கு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவின் ஆட்சி இந்த நாட்டில் இடம் பெறவுள்ளது. இந்த காலத்தில் யுத்தத்தால் கடுமையாக சீரழிக்கப்பட்ட தமது தமிழ் பிரதேசங்களில் மகிந்த ராஜபக்ஸ தலைமையிலான அரசுக்கு முழுஆதரவினை வழங்க வேண்டும். இதற்கு ஏற்ற நல்ல சந்தர்ப்பம் எமக்கு கிடைத்துள்ளது. எனவே நடைபெற இருக்கும் பொதுத் தேர்தலில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பினை அமோக வெற்றி பெறச் செய்து ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவினால் அமையப்போகும் அரசாங்கத்தின் அபிவிருத்தியின் பங்குகளை தவறாது வெற்றுக் கொள்ள வேண்டும்.
வாகரை பிரதேசம் பல வளங்களைக் கொண்டிருந்த போதிலும் இன்றும் முழுமையான அபிவிருத்தியை அடையவில்லை. இதற்கு எமது பிரதேசத்தில் நிலவிய யுத்த சூழலும் காரணமாகும்.
எனவே இந்த அபிவிருத்திகளை சீராக அமுல் நடத்துவதற்துகு எமக்கு உறுதியாக செயற்படக்கூடிய பாராளுமன்ற உறுப்பிணர்களை தெரிவு செய்வதற்கு இப்பகுதி முன்வரவேண்டும் எனக் கேட்டுக்கொண்டார். இதில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட வேட்பாளர் கந்தலிங்கம் சத்திய வரதன் பட்டிருப்பு தொகுதி வேட்பாளர் குணரெட்ணம் கட்சி அமைப்பாளர்கள் ஆதரவாளர்கள் கிராம அபிவிருத்தி உறுப்பிணர்கள் போன்ற இன்னோரன்ன பொதுமக்கள் கலந்து கொண்டனர்.



