மட்டக்களப்பு வாகரை பிரதேச செயலகங்களுக்குட்பட்ட விளையாட்டு கழகங்களுக்கு தேசிய நல்லிணக்க ஒருமைப்பாட்டு அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் இன்று விளையாட்டு பொருட்களை அன்பளிப்பு செய்தார்.
இப்பிரதேச விளையாட்டு விரர்களின் விளையாட்டு திறனை ஊக்குவிக்க அமைச்சர் முரளிதரன் வேண்டுகோளால் விளையாட்டுத்துறை பொழுது போக்குகள் அமைச்சு எடுத்துவரும் நடவடிக்கைகளுக்கமைய இந்த விளையாட்டு உபகரணங்கள் அன்பளிப்பு செய்யப்பட்டுள்ளன. 05.03.2010 இன்று மாலை வாகரை பாற்சேனை பகுதியில் நடைபெற்ற விசேட வைபவத்தில் அமைச்சர் முரளிதரன் விளையாட்டுப் பொருட்களை அன்பளிப்புச் செய்தார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் அமைப்பாளர் ரீயசீலன் தலைமையில் நடைபெற்ற இவ் வைபவத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பாராளுமன்ற பொது தேர்தல் பொது வேட்பாளர்களான கே.சத்தியவரதன் பி.குணசேகரம் தேசிய நல்லிணக்க ஒருமைப்பாட்டு அமைச்சின் இணைப்புச் செயலாளருமான ருத்திரமலர் பாஸ்கரன் மாவட்ட இணைப்பாளர் பி.ரவீந்திரன் உட்பட பல கட்சி ஆதரவாளர்களும் கலந்து கொண்டனர்.



