மாதர் அமைப்புக்களின் விருத்திக்கும் விதவைகளின் மறுவாழ்விற்கும் எதிர்காலத்தில் உதவுவேன். கருணா அம்மான் மாமாங்கத்தில் இடம்பெற்ற கூட்டத்தில் தெரிவித்தார்.
03-06-2010 ம் திகதியன்று காலை 11.30 மணியளவில் மாமாங்க் பகுதியில் மாநகர சபை உறுப்பினர் மு.தவராஜா தலைமையில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது. இக்கலந்துரையாடலில் விசேட பிரதிநிதியாக கலந்து கொண்ட மதிப்பிற்குரிய தேசிய நல்லிணக்க ஒருமைப்பாட்டு அமைசசர் திரு.வி.முரளிதரன்(கருணா அம்மான்) அவர்கள் கலந்து கொண்டார்.
மேலும் இக்கலந்துரையாடலில் அப்பகுதி மக்களால் முன்வைக்கப்பட்ட பல பிரச்சனைகளுக்கு உடனுக்குடன் தீர்வுகள் காணப்பட்டது. மாமாங்க பிரதேசத்தை சேர்ந்த விளையாட்டு கழகத்திற்கும் விளையாட்டு உபகரணங்களும் வழங்கப்பட்டன. அத்துடன் மீன்பிடியை ஜீபனோபாயமாக கொண்டவர்களுக்கு விசேட கடன் உதவிகளை வழங்குவதற்கும் ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் வண.பிதா அருமைராசா அவர்கள் வேண்டிகொண்டதற்கு இணங்க கிறிஸ்தவ தேவாலயத்திற்கு சீமேந்து பைகளையும் வழங்குவதற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இறுதியாக இந்நிகழ்வில் கலந்து கொண்ட மககளிடம் வெறிறிலை சின்னத்திற்கு வாக்களிப்பதன் மூலமே பாராளுமற்;றத்தில் தமிழர் பிரதிநிதித்துவத்தை பாதுகாக்கதமுடியும் எனவும் கேட்டுகொண்டதுடன் தேர்தல் பற்றிய விழிப்புணர்வு கருத்துக்களையும் மக்களுடன் பகிர்ந்து கொண்டார்.



