தேசிய நல்லிணக்க அமைச்சரும் சுதந்திரக்கட்சியின் உப தலைவருமாகிய விநாயகமூர்த்தி முரளிதரன் அவர்கள் மட்டுமாவட்டத்தில் பல பிரதேசங்களுக்கு விஜயம்…..
நடைபெறவிருக்கும் 2010 பாராளுமன்ற தேர்தலுக்கான ஸ்ரீலங்கா சுதந்திரகட்சியின் மட்டக்களப்பு மாவட்ட வேட்பாளர்களான க.சத்தியவரதன் குணசேகரம் ஆகியோரின் பிரச்சாரங்களுக்கு வலுசேர்க்கும் வகையில் தேசிய நல்லிணக்க அமைச்சரும் ஸ்ரீலங்கா சுதந்திரகட்சியின் உப தலைவருமாகிய விநாயகமூர்த்தி முரளிதரன் அவர்கள் மட்டக்களப்பின் பல பிரதேசங்களுக்கு விஜயம் செய்திருந்தார். இதன் ஓர் அங்கமாக நேற்று முன் தினம் 06.03.2010 சனிக்கிழமை வாகரை பகுதிக்கு சென்று அங்குள்ள மக்களின் குறைநிறைகளை கேட்டறிந்ததோடு வாகரை பிரதேச போக்குகுவரத்து அதிகாரியுடன் கலந்துரையாடி அங்கு நிலவும் பிரச்சனைகளையும் கேட்டறிந்து கொண்டார். இதன் போது கட்டுமுறிவு பிரதேசத்திற்கான போக்குவரத்துச் சேவை தொடர்பாகவும் கவனம் செலுத்தப்பட்டது. இந் நிகழ்வில் ஸ்ரீலங்கா சுதந்திரகட்சியின் மட்டக்களப்பு மாவட்ட வேட்பாளாகளான சத்தியவரதன் குணசேகரன் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்.



